பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

கொண்டு கிளம்பி விடுவார்கள், புலி வேட்டைக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் தங்களுடைய குல தெய்வங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவர். அங்குள்ள பூசாரிகள் மருள் கொண்டு ஆடி வேட்டையின் முடிவைப்பற்றி முன்கூட்டிச் சொல்லுவதும் உண்டு. புலி படுத்திருக்கும் இடத்தைச் சுற்றிப் 'ப' வடிவாக வலையை அமைப்பர், ஒரு பனியன் மரத்தின்மேல் ஏறிக் கொண்டு மற்றவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிப்பான். கையில் 12 அடி நீளமுள்ள குத்தீட்டிகளோடு புலியை நாற்புறமும் வளைத்துக் கொள்வர், அவ்வலைக்குள்ளேயே அப் புலியைப் பல நாள் பட்டினிபோட்டு, ஈட்டியால் குத்தித் துன்புறுத்துவர்; இரைச்சலிட்டுக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் புலியைக் கொல்லுவார்கள்.

சிறுத்தையும் கரடியும் :

சிறுத்தைகள் இம் மலையில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. கருஞ் சிறுத்தைகள் பீடபூமிகளைவிடச் சமவெளிகளில் அதிகமாகத் தென்படுகின்றன. கரடிகளும் இங்கு நிறைய உண்டு. ஆனால் அவை சரிவுகளிலும் தாழ்வான பீடபூமிகளிலுமே அடிக்கடி காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பள்ளத்தாக்கில் முதலில் நிறைய இருந்தனவென்று காட்டதிகாரிகள் கூறுகின்றனர்.

மான் :

மானினம் இங்கு நிறைய வாழ்கிறது. காடு உள்ள இடங்களிலெல்லாம் மான்களைக் காணலாம். குறிப்பாகக் குந்தாப் பீடபூமியிலுள்ள பள்ளத்தாக்கில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. வேட்டைக் கழகத்தாரால் (Game Association) இக் காடு பாதுகாக்கப்படுவதால், அயலார் யாரும் அனுமதி பெற்றலன்றி இக் காட்டிற்குள் வேட்டையாடச் செல்ல முடியாது. எனவே மானினம் இங்கு பெருகி வளர்ந்