பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

னின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. வாழ்நாள் முழுதுமோ அல்லது குறிப்பிட்ட சில நாட்களோ இவர்கள் புலால் உணவை ஒதுக்கி விடுகின்றனர். மலையாளிகளின் முக்கியமான பெருவிழாக்கள் பொங்கல், தீபாவளி, ஆடிப்பதினெட்டு ஆகிய மூன்றுமே. அவற்றில் பொங்கல் திருநாள் மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று மலையாளிகள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு வேட்டைக்குச் (Hunting Excursion) செல்வதுண்டு . அன்று நடைபெறும் எருதாட்டம் (Bull Dance) கண்டு மகிழத்தக்கது.

வேறு சில பழக்கங்கள் :

மலையாளிகள் பொதுவாக வரகு, தினை, அரிசி ஆகியவற்றைச் சமைத்து உண்கின்றனர். பன்றி இறைச்சியும் அவர்களுடைய உணவில் முக்கிய இடம்பெறுகிறது. சக்கிமுக்கிக் கல்லை இரும்புத்துண்டால் அடித்து நெருப்புண்டாக்கும் பழக்கம் இன்னும் பச்சை மலையாளிகளிடம் நிலவி வருகிறது. ஒவ்வொரு பட்டியிலும் இருவர் அல்லது மூவரே இக்கருவியை வைத்திருக்கின்றனர். நெருப்பு உண்டாக்குவதற்குப் பயன்படும் துணைப் பொருளான பஞ்சை ஒரு தோற் பையில் பொதிந்து வைத்துள்ளனர். வண்ணான், நாவிதன், மருத்துவச்சி ஆகியோரின் பணியை அவர்களிலேயே ஒரு சிலர் மேற்கொண்டு செய்கின்றனர். முக்கியமான செய்திகளைத் துடும்பு கொட்டி எல்லாப் பட்டிகளிலும் அறிவிக்கும் வேலையை அங்குள்ள அரிசனங்கள் (பறையர்) செய்கின்றனர். வயல்களில் வேலைசெய்வதற்கும், வேட்டையில் துணை புரிவதற்கும் அரிசனங்களையே அமர்த்தியிருக்கின்றனர். கால்நடைகளில் ஏதாவதொன்று இறந்துவிட்டால், மலையாளிகள்யாரும் அதன் அருகில் கூடச் செல்லமாட்டார்கள் ; அதைத் தொடவுமாட்டார்கள். அருகிலிருக்கும் அரிசனங்