118
தமிழ்ப் பழமொழிகள்
கி
கிங்கிணிக்குக் கிங்கிணியும், மங்கிணிக்கு மங்கிணியும் கெட்டது.
கிட்ட உறவு முட்டப் பகை.
- ( + தூர இருந்தால் நீள உறவு.)
கிட்டக் கிட்ட வந்தாலும் எட்ட எட்டப் போகிறான். 8230
கிட்ட நெருங்க முட்டப் பகை.
கிட்ட வா நாயே, என்றால் எட்டி மூஞ்சியை நக்க வந்தாற் போல.
கிட்டாதாயின் வெட்டென மற.
- (கிட்டாத ஒன்றை.)
கிட்டிற்று, முட்டிற்று, வடுகச்சி கல்யாணம்.
கிட்டினால் ராமா, கோவிந்தா; கிட்டாவிட்டால் ஒன்றும் இல்லை. 8285
கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை.
- (கிழவியை, கிழவனை எடுத்து மடியில் வைத்துக்கொள்)
கிடக்கிறது எல்லாம் கிடக்கக் கிழவியைத் தூக்கி மணையில் வைத்தாளாம்.
கிடக்கிறது ஒட்டுத் திண்ணை; கனவு காண்கிறது மச்சு வீடு.
கிடக்கிறது கிடக்கட்டும்; கிழவனையும் கிழவியையும் உள்ளே விடுங்கள்.
கிடக்கிறது குட்டிச்சுவர்; கனாக் காண்கிறது மச்சு வீடு. 8299
- (மச்சு மாளிகை.)
கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்.
கிடந்த பசியைக் கிள்ளிக் கிளப்பினானாம்.
கிடாக் கன்று போட்டது என்றால் பிடித்துக் கட்டு என்றானாம்.
கிடாரம் உடைந்தால் கிண்ணிக்கு ஆகும்; கிண்ணி உடைந்தால் என்னத்துக்கு ஆகும்?
கிடாவும் காளையும் பிணைத்தாற் போல. 8295