பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மார்ச்சனம்

330

மாற்றம்


மார்ச்சனம் = சுத்திசெய்தல் மார்ச்சனி = துடைப்பம் மார்ச்சனை = முழவிற்கிடும் மண், முழவு ஒலி மார்ச்சாரம் = பூனை மார்ச்சாலம் = பூனை மார்த்தாண்டன் = சூரியன் மாலதி = சந்திரகிரணம், சிறுசண்பகம், முல்லை மாலயற்கரியன் = திருமாலாலும் பிரமனாலும் அறியப்படாத சிவபெருமான் மாலர் = புலையர், வேடர் மாலிகை = கழுத்தணி மாலை மாலினி = உமை, காளி மாலுதல் = மயங்குதல், மாட்சிமைப்படுதல் மாலுதானன் = கண்குத்திப் பாம்பு மாலுந்திவந்தோன் = திருமாலின் கொப்பூழில் தோன்றிய பிரமன் மாலூரம் = வில்வம், வில்வ மரம் மாலை = அந்திப்பொழுது, இயல்பு, இரா, ஒழுங்கு, வரிசை மால் = அருகன், இந்திரன், கருமை, காற்று, திருமால், புதன், பெருமை, மயக்கம், மேகம், வேட்கை மால்பு = மூங்கிலேணி மாவலர் = குதிரைப்பாகர் மாவிரதியர் = சைவத்துறவியர் மாவிளம் = வில்வம் மாழாத்தல் = மயங்குதல், ஒளி மழங்குதல் மாழை = அழகு, அறிவின்மை, மான், இளமை, ஓலை, திரட்சி, புளிமா, மாமரம், உலோகக்கட்டி, பொன் மாழ்கு = மயக்கம், மிருகசீரிடம் மாழ்குதல் = சோம்புதல், கெடுதல், மயங்குதல் மாளிகை = கோயில், அரண்மனை மாறல் = கூத்தாடல், தவிர்தல், விற்றல், வேறாதல், மயங்கல் மாறன் = சடகோபாழ்வார், பாண்டியன் மாறு = துடைப்பம், முரண், விற்றல், வேறு, எதிர், இறந்துபாடு, பகை, ஒப்பு, உத்தரம் மாறுதல் = விற்றல்(உத்தரம் ) மாற்சரியம் = பொறாமை மாற்றம் = சொல், மறைத்தல், எதிர்மொழி, பகை