பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆராவம்

34

ஆர்ப்பரவம்


ஆராவம் = ஒலி
ஆரி = அருமை, மேன்மை, அழகு, சோழன், கதவு
ஆரிடம் = இருஷிகள் எழுதிய நூல், வழுக்கு நிலம், ஒருவகை மணம் (அதாவது பசு எருதுகளின் முன்னிலையில் நீர் வார்த்துக் கன்னியைக் கொடுக்கும் திருமணம்)
ஆரிடர் = பொறுத்தற்கரிய துன்பம், குருமார், முனிவர், சமணர்
ஆரிடை = கொடிய வழி
ஆரியக் கூத்து = மூங்கிற் கூத்து
ஆரியம் = அழகு, மேன்மை, சமஸ்கிருத மொழி, இமயமலை விந்திய மலைகளுக்கு இடையில் உள்ள நாடு, கேழ்வரகு
ஆரியர் = மிலேச்சர், அறிஞர்,ஆசிரியர், குரு, சிவன், ஐயனர், பூசிக்கத் தக்கவர்
ஆரியாங்கனை = சமணத் தவப்பெண்
ஆரியை = பார்வதி, துர்கை
ஆரீதம் = கரிக்குருவி
ஆருகதம் = சமணமதம்
ஆருயிர்மருந்து = சோறு
ஆரூடம் = ஏறுதல், நினைத்ததை அறிந்து கூறும் சோதிடம்
ஆரை = புல்பாய், மதில், வண்டியின அச்சு மரம், ஒரு கீரை
ஆரோகணம் = ஏறுதல், கல் படிக்கட்டு, தாழ்வாரம்
ஆரோபித்தல் = ஏற்றுதல்
ஆர் = ஆத்திமலர், பூமி, கூர்மை, நிறைவு, அருமை, அழகு, யார், செவ்வாய், சரக்கொன்றை
ஆர்கதம் = சமண சமயம்
ஆர்கலி = கடல், மழை, வெள்ளம், நிறைந்த ஒலி
ஆர்ச்சிதம் = சம்பாதிக்கப் பட்டது
ஆர்தல் = அனுபவித்தல், நிறைதல், அன்பு செய்தல், புசித்தல், பொருந்துதல், அடைதல், ஒத்தல், தங்குதல், குடித்தல்
ஆர்த்தர் = எளியர், நோய் உற்றவர்
ஆர்த்தல் = அணிதல், ஆட்டல், பொருதல்,ஆரவாரித்தல், பொருத்தல், ஒலித்தல், நிறைத்தல், கட்டுதல், தொகுத்தல்
ஆர்த்தவம் = மகளிர்பூப்பு
ஆர்த்தி = துன்பம், உண்பித்து, கொடுத்து
ஆர்த்திகை = துன்பம்
ஆர்பதம் = நிழல், வண்டு, உணனும உணவு
ஆர்ப்பரவம் = ஒலி