பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெ




 
வெகுட்சி = கோபம்
வெகுமஞ்சரி = துளசி
வெகுமூலம் = முருங்கை
வெகுளி = கோபம்
வெகுளுதல் = பகைத்தல், கோபித்தல்
வெகுள்வு = கோபம்
வெக்கை = மிக்க உஷ்ணம், கடாவிடுகளம், நிலக்கொதிப்பு
வெங்கண் = கொடுமை
வெங்கதிர் = சூரியன்
வெங்களம் = போர்க்களம்
வெங்குரு = சிகாழி
வெஞ்சமர் = போர்
வெஞ்சுடர் = சூரியன்
வெடி = அச்சம், இடி, கள், நறும்புகை, வெளி, ஒலி, பகை, கேடு, முழக்கம்
வெடித்தல் = வீசுதல், பகைத்தல், முழங்குதல், பிளத்தல், விள்ளுதல்
வெடிபடுதல் = அஞ்சுதல், பேராசையுண்டாதல்
வெட்சி = பசுக் கூட்டங்களைக் கவர்தல், ஒருவகை மலர்
வெகட்டி = வீண், ஒருவகைச் செடி
வெட்டிமை = கொடுமை
வெட்டென = கடுமையாக, கொடுமையாக
வெட்டை = வெளிமிகு வெப்பம்
வெண்கமலை = சரஸ்வதி
வெண்கதிர் = சந்திரன்
வெண்கமளர் = வேளாளர்
வெண்கை = வெறுங்கை, அழகியகை
வெண்கொல் = வெள்ளி
வெண்சலசமுற்றாள் = சரஸ்வதி
வெண்டலை = தலையோடு
வெண்டாது = வெள்ளி
வெண்டாமரையாள் = சரஸ்வதி
வெண்டேர் = கானல்
வெண்டையம் = ஒரு சிறு மணி
வெண்டோடு = பனந்தோடு
வெண்ணஞ்சு = நிணம்
வெண்ணிலை = கைமாற்றுக் கடன்
வெண்பலி = சாம்பல்
வெண்பாட்டம் = கோடைக்கால மழை
வெண்போழ் = தாழைமலர்
வெண்பொன் = வெள்ளி
வெண்பொன்மலை = கைலாயம்
வெண்மீன் = வெள்ளி
வெண்மலை = கைலைமலை
வெண்மை = அறிவின்மை, இளமை, களங்கமின்மை