பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடம்படல்

40

இடைச்சரி


இடம்படல் = மிகுதல், விரிதல்
இடம்பாடு = செல்வம், விரிவு
இடம்புரி = இடப்பக்கம் சுழிந்த சங்கு
இடர் = வறுமை, துன்பம், நோய்
இடவை = வழி
இடறு = தடை
இடறுதல் = கடத்தல், தட்டுதல், உழக்குதல், துன்பப்படுத்தல், எற்றுதல்
இடன் = இடம், அகலம்
இடாகினி = பிணம் தின்னும் பேய், காளியின் ஏவல்கள்
இடார் = இறை கூடை, எலிப்பொறி
இடாவேணி = அளவிடப்படாத எல்லை
இடி = உறுதிச் சொல், ஒலி, தினமா, இடி
இடிஞ்சில் = அகல்
இடித்தல் = உறுதி கூறல், ஒலித்தல், வெட்டல், கோபித்தல்
இடிம்பு = அவமதிப்பு
இடியல் = பிட்டு, மா
இடியேறு = பேர் இடி
இடிவு = அழிவு
இடீகை = வியாக்கியானம்
இடீக்கு = இடம்பம், மேன்மை
இடுகாடு = பிணம் புதைக்கும் இடம், சுடுகாடு
இடுகிடை = சிற்றிடை
இடுகுறி = பெயர்
இடுகை = ஈதல்
இடுக்கண் = துன்பம், தரித்திரம்
இடுக்கம் = துன்பம், ஒடுக்கம்
இடைவு = தோல்வி, மெலிவு
இடுதேள் = பொய்க்காரணம்
இடும்பு = கர்வம், கொடுஞ்செயல், குறும்பு
இடும்பை = துன்பம், தீமை, வறுமை, நோய், அச்சம்
இடுவத்தி = இல்லாத குற்றத்தை ஏற்றுதல்
இடை = இடம், நடு, இடுப்பு, துன்பம், பக்கம், வழி, இடையர், காலம், சமயம், அளவு, வேறுபாடு, இடையின எழுத்து
இடை கலை = இடமூக்கு மூச்சு, சந்திரகலை
இடைகழி = ரேழி, வாயிலைச் சேர்ந்த உள் நடை
இடைக்கணம் = இடையினம்
இடைக்கலம் = மண்பாண்டம்
இடைச்சரி = தோள்வளை