பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைக்கோட்டுத்தண்டு

473

கல்லாடம்


உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். கடைச்சங்க காலம். இதில் கூனும் குறளும் கூடிப் பேசும் பேச்சும், பட்டிமகன் குறும்பும், மற்றும் பல குறிப்புக்களும் படிக்கப் படிக்கச் சுவை தருவனவாகும்.

கலைக்கோட்டுத்தண்டு = இது நிகண்டு நூல். இதில் சொற்பொருள் விளக்கம் காணப்படும். இது இப்போது கிடைத்திலது. இறந்து பட்ட நூற்களுள் ஒன்று. இலக்கண உரை நூற்களில் பெயர் அளவில் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட்ட நூல். காலம் அறிதற்கு இல்லை.

கலைசைச் சிலேடை வெண்பா = இது சுப்பிரமணிய முனிவரால் பாடப்பட்டது. இதில் உள்ள சிலேடைக்கென அமைந்த சொற்றொடர்கள் தமிழ் அறிவைப் பெருக்கிக் கொள்ளுதற்குத் துணை செய்ய வல்லன. இதில் வரும் சிலேடைத் தொடர்களில் “கண்டகரச் சாடும் கலைசையே” என்பது ஒன்று. அத்தொடர் கண்டகர் அச்சு ஆடும் கலைசையே என்றும், 60 பிரிந்து பொருள் தருதலைக்காண்க. காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு.

கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி = சிவஞான முனிவரால் பாடப்பட்டது. 100 பாடல்களைக் கொண்டது. காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.

கல்லாடம் = இது கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ‘கல்லாடம் படித்தவரோடு மல்லாடாதே’ என்ற பழமொழியினால் இதன் அருமை பெருமைகளை அறியலாம். இதில் 100 அகவல் பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் கேட்டபோது மதுரைச் சொக்கலிங்கப் பெருமானார் தலையசைத்து அசைத்து இன்புற்றார் என்று கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் பாடல்களில் 100 பாடல்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, அப்பாடல்களுக்குரிய விளக்கம்போல் இந்நூலைப் பாடியுள்ளார். இதற்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை 30 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். மிகுதியான 63 பாடல்களுக்குப் புதுவை சுப்பராய முதலியார் உரை