பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூடாமணி நிகண்டு

494

செவ்வந்தி புராணம்


நூற்றாண்டு. கொடிய விலங்குகளையும் அடக்கி அவற்றை நல்வழிப்பட நபிநாயகம் செய்த குறிப்பு முதலியன இதில் உண்டு. இதில் வரும் வர்ணனைக் கவிகள் சுவை தருவனவாகும்.

சூ

சூடாமணி நிகண்டு = சொற்பொருளை அறிதற்குச் செய்யுளில் அமைந்த நூல். இக்காலத்து அகராதி போல அக்காலத்தில் இருந்த அகராதி நூல். இதன் ஆசிரியர் மண்டலபுருடர். கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

சூத்திரர் யார் ? = பிராம்மணர்கள் தம்மைத் தவிர்த்து மற்றைய யாவரையும் சூத்திரர்கள் என்று கூறித் தம்மை வேறு பிரித்துக்கொண்டு கூறி வருவதைத் தக்க காரணம் காட்டிக் கண்டித்து ஐே.எஸ்.கண்ணப்பர் என்னும் தன்மானம் மிக்கவரால் உரைநடையில் எழுதப்பட்ட நூல். காலம் கி.பி. 20ஆம் நூற்றாண்டு நூல்.


சூளாமணி = ஐஞ்சிறு காப்பியங்களில் தலைசிறந்த நூல். தோலாமொழித்தேவர் எழுதிய நூல். இவரை ஸ்ரீ வர்த்ததேவர் என்றும் கூறுவர். இதில் வரும் வரலாறு கண்ணன் பலராமன் கதை போன்று திவட்டனது வரலாறு கூறப்படுகிறது.இவனது பகைவன் அயக்கிரிவபிரதிவாத தேவன் என்பவன். காலம் கி.பி. 10 நூற்றாண்டு.

செ

செங்கோன் தரைச்செலவு = இது ஒரு பழைய நூல். முற்றும் கிடைக்கப் பெறாத நூல். ஏழு பாடல்களும் அவற்றிற்குரிய உரையும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. முதல் ஊழிக் காலத்து நூல்.இவ்வாறு கூறுவது குறித்து மேலும் ஆராய வேண்டி இருக்கிறது.

செவ்வந்தி புராணம் = திருச்சிராப்பள்ளி மான்மியம் கூறும் நூல். சைவ எல்லப்ப நாவலர் இதன் ஆசிரியர். காலம். கி. பி.17 ஆம் நூற்றாண்டு. திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள தாயுமானேஸ்வரருக்குத் தாயுமானவர் என்ற பெயர் எதனால் அமைந்தது என்ற காரணத்தை இந்நூலில் காணலாம்.