பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிங்கல நிகண்டு 530 புலவர் புராணம்


அவர்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் இருக்கின்றார். இதன் ஆசிரியர் பரிதிமாற் கலைஞர் என்னும் திரு.வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் ஆவார். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.

பிங்கல நிகண்டு = நிகண்டு என்பது தமிழ் மொழியில் உள்ள சொற்களின் பொருளை அறிவிக்கும் நூலாகும். இதனைப் பாடியவர் பிங்கல முனிவர். காலம் 10 ஆம் நூற்றாண்டு.

பிரதாப முதலியார் சரித்திரம் = இது ஒரு நல்ல தமிழ் நாவல். படிக்கப் படிக்கச் சுவையும் நகையும் தரும் நூல். எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. காலம் 19-ஆம் நூற்றாண்டு.

பிரபுலிங்க லீலை = கன்னட தேசத்துக் கதைகளின் தொடர்புடையது. காவியச்சுவை ததும்ப வெகு அழகான முறையில் பாடப்பட்டது. வீர சைவ சித்தாந்தக் கருத்துக்ககளைக் கதைகளின் வாயிலாக விளக்கும் நூல். இதில் உள்ள பிரிவுகள் படலம் என்றோ, சருக்கம் என்றோ, கூறப்படாமல் கதி என்று கூறப்பட்டிருக்கும். பிரபுவாகிய லிங்கத்தின் திருவிளையாடல்களைக் கூறும் நூல், மாயையின்வன்மை, அல்லமன் மாண்பு முதலானவற்றைக் காணலாம். இதில் காணப்பெறும் வா்ணனைகளும் கற்பனைகளும் கற்றோர்க்கு இன்பம் தரும். ஆசிரியர் துறைமங்கலம் சிவப்பிரகாச கசுவாமிகள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

பிரபோத சந்திரோதயம் = அறிவு, மோகத்துடன் சண்டை செய்து, வெற்றி காண்கின்றது என்பதை விருத்தக் கவியால் காவிய இன்பம் தோன்றப் பாடப்பட்ட ஒரு வேதாந்த நூல். ஆசிரியர் திருவேங்கட மன்னன். திருவேங்கிடநாத ஐயர் என்றும் கூறுவர். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

பு

புலவர் புராணம் = பண்டைக் காலத்துப் புலவர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல். இதனைப் பாடியவர் முருகதாச