பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எரிவு

83

எழினி


எரிவு = பொறாமை, எரிச்சல், கோபம்
எரு = உரம், மலம்
எருக்குதல் = வருத்துதல், வெட்டுதல் அடித்தல், அழித்தல், சுமத்துதல், கொல்லுதல்
எருத்தம் = கழுத்து, பிடர், தோள், ஈற்றயல்
எருந்து = கிளிஞ்சில்
எருமணம் = செங்குவளை
எருமன்றம் = இடையர்கள் ஊரில் உள்ள சபை, மாடுகள் கூடுமிடம்
எருமுட்டை = வறட்டி
எருமைப்போத்து = எருமைக் கடா
எருமைமறம் = மற்போர்
எருவை = இரத்தம், கழுகு, பருந்து, செம்பு, கோரை கிழங்கு
எலி = பூரநாள், எலி
எலித்திசை = வடமேற்றிசை
எலு = கரடி, பிஞ்சு
எலுவல் = தோழன்
எலுவை = தோழி
எல் = இகழ்ச்சி, ஒளி, சூரியன், பகல், வெயில், நாள் மாலை, பெருமை, வெளி, இரவு
எல்லம் = இஞ்சி
எல்லவன் = சூரியன்
எல்லார் = தேவர்
எல்லி = இரவு, சூரியன், பகல்
எல்லை = சூரியன், அவதி, அளவு, இடம், பொழுது, வரம்பு, முடிவு
எல்லையிலி = கடவுள்
எல்லோன் = சூரியன்
எல்வளி = பெருங்காற்று
எல்வை = காலம், நாள்
எவண் = எவ்விடம், எவ்வண்ணம்
எவ்வது = யாதொருவாறு
எவ்வத்தன் = வருத்தமுடையவன்
எவ்வம் = இகழ்ச்சி, குற்றம், கபடம், தீரா நோய், துன்பம், வெறுப்பு, மானம், இளிவரவு
எவ்வனம் = யெளவம்
எழல் = எழுதல், கிளர்ச்சி, உதித்தல்
எழாநிலை = யானை கட்டும் கூடம்
எழால் = ஒரு பறவை, யாழ் இசை, மிடற்றின் இசை
எழிலி = மேகம்
எழில் = எழுச்சி, அழகு, இளமை, பெருமை, வலி, உயர்ச்சி, வெளிப்பட்டுத் தோன்றுதல், பொலிவு, வளர்ச்சி
எழினி = திரைச்சீலை, உறை, கடைஎழு வள்ளல்களில் ஒருவன்