பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—22—

இப்பெருநாடும் இதன்பெருங் கூட்டமும்
'“யாம்”என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலிலும் நம்
இனத்தைச் செய்வார் இகழ்ச்சி. 24

மாடுண்பவன் திருக் கோயிலின் வாயிலில்
வருதற் கில்லை சாத்யம் - எனில்
ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற் பாத்யம். 25

நீடிய பக்தியில் லாதவர் கோயில்
நெருங்குவ தால் தொல்லையே! - எனில்
கூடிஅக் கோயிலின் வேலை செய்வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே? 26

"சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ?" - எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பிரே. 27

நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே - கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே. 28