பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேசு பொழிந்த தெள்ளமுது


மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி தோழி - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்
காதினிக்கும் படி சொன்னசொல் ஏதடி? தோழி - அந்தக்
கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி - இந்தப்
பாரதநாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம்புரிந்தனர் தோழா.
ஏசுமதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி - சட்டம்
நால் வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம்புகப் - பேதம் அகன்றதோ? தோழி - அவர்க்
கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா.

***