பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நூற்றாண்டின் தொடக்கத்திலும் இவ்விரண்டையும் ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கப் பெற்றது. சமய குரவர்கள் நால்வர் வாழ்க்கையும்கூடச் சன்மார்க்கம், சத்புத்ரமார்க்கம் என்றெல்லாம் பெயரிடப் பெற்றுச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றுள் சமய குரவர்கள்கூடப் புகுத்தப்படும் முயற்சி தொடங்கிற்று.

நல்ல வேளையாக இம்முயற்சியைச் செய்தவர்கள் திருமுறைகளில் கைவைக்கவில்லை. சாத்திரம், தோத்திரம் என்று பிரித்து, திருமுறைகளைத் தோத்திரம் என்ற தலைப்பில் அமைத்துவிட்டனர். பல திருமுறைகள் இப்பெருமக்கள் பார்வையில் படவில்லை என்றாலும் என்ன காரணத்தாலோ திருவாசகம் இவர்கள் கையில் சிக்கிக்கொண்டது. சாத்திரத்தில் ஊறித் திளைத்து, அந்தச் சட்டையை அனைவருக்கும் அணிவித்து மகிழ்ந்த அந்தப் பெருமக்கள் திருவாசகத்தின் ஆழ்ந்த உட்பொருளை அறியாமற்போனதில் வியப்பில்லை.

திருவாசகம் ஏனைய திருமுறைகளைப் போலல்லாமல் தனித்து நிற்கும் சிறப்புடையதாகும். ஏழு திருமுறைகளும் இறையநுபவத்தில் தோய்ந்த மூவர் முதலிகளால் பாடப்பெற்றன என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் அனைவரும் இறைவனைப் புகழ்ந்து அவனுடைய அளப்பரும் தன்மையைப் பாடினார்களே அன்றி, தாம் பெற்ற இறையநுபவத்தை அது எவ்வாறு இருந்தது என்பதைப் பாடவில்லை. இந்த நிலையில் மூவர் முதலிகளுக்குப் பிற்பட்டு, மணிவாசகப்பெருமான் தோன்றுகிறார். அவர் பாடிய திருவாசகம் முழுவதும் அவர் பெற்ற இறையதுபவத்தைப் பிழிந்து, பாடல்களாகத் தருவதாகும்.

இந்த வேறுபாட்டையும் துணுக்கத்தையும் அறிந்திராத சிலர் ஏனைய ஏழு திருமுறைகளைப்போல் திருவாசகம்