பக்கம்:நாள் மலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவர் வீட்டில் அமைச்சர் மருத்துவர் ! வாங்க வாங்க நீங்க ஆரு அமைச்சர் : கவ்வி அமைச்சன் நான்! கண்ணா தெரியலே மருத்துவர்: வாங்க வாங்க நீங்க தானா? என்ன சேதிங்க? அமைச்சர்: இன்ன நோயின்னே இன்னும் புரியவே கையை பாருங்க கருத்தா! (மருத்துவர் நாடியைப் பார்க்கிறார்) மருத்துவர்: தானே வந்த நோய் அல்ல. தேடி நீங்க சேத்த நோய் தானுங்க. அமைச்சர்: இந்த நோய்க்குப் பேர் இன்னதிண்ணில்லையா? மருத்துவர் : இருக்கிற குறிப்பே எடுத்துச் சொல்றேன்: நாக்கிலே துடுக்கு, நடையிலே பதறல், மூக்கிவே எரிச்சல், முன்தொண்டை நடுக்கம், கண்ணிலே கொஞ்சம் கசப்பான தோற்றம். இருக்குதா இல்லியா? அமைச்சர்: இருக்குதே இருக்குதே! என்ன பண்லாங்க! மருத்துவர்: இலேசாத் தீந்திடும், இந்த நோய் ஓர் வாகைக் காரகத் தாலே கண்டது, சீரகத்தாலே தீரணும் அமைச்சரே! [காரகம்: ஒரு நோய். அதுவே கார்+அகம் எனப் பிரித்து கருமையான உள்ளம் அதாவது தெளிவற்ற உள்ளம் எனப் பொருள்படும். சீரகம்: மருந்துச் சரக்கு; அதுவே சீர்+அகம் எனப் பிரித்து உயர்ந்த உள்ளம் எனன் பொருள்படும்.] குயில் 1-7-47 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/23&oldid=1524966" இலிருந்து மீள்விக்கப்பட்டது