பக்கம்:நாள் மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் முதலமைச்சர் கோட்டை குப்பத்தில் சீரார் சென்னை முதல மைச்சரே! பாரோர் போற்றும் பண்புடை யோரே! தென்னார்க் காட்டைச் சேர்ந்த பீர்க்கா கோட்டைக் குப்பம் வாழும் குடிகள்யாம் தங்கள் வருகையை எங்கள் பேறென எண்ணி வரவேற் கின்றோம் இந்நாள்: தங்கள் மனமுவந்து யாங்கள் வாழ்விடம் வருகை தந்ததே மகிழ்ச்சிக் குரியது நன்றியும் வணக்கமும் நவிலு கின்றோம். நாட்டுக்கு மீட்சி வந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் எங்கள் ஊர் நிலை இன்னதென்று யாரும் நினைக்கிலர். பொன்விளை புழுதியைப் புனலால் நனைக்க மின்சார வசதி வேண்டும் அன்றே! இன்று வரைக்கும் இம்மியும் இல்லை. வெயிலில் கிடக்கும் குயிலாப் பாளையம் தண்ணீர் வசதி இன்றித் தவித்தது, பாதை வசதி ஏதும் இல்லை. சின்ன கோட்டைக் குப்பம் சிறிதும் பாதையின்றிப் பள்ள மாகின்றது. எழில்சேர் நன்செய் நிலங்கள் இருந்தும் குழாய்க் கிணறு இல்லாக் குறையால் ஏதும் உழாத நிலைமை உடையன ஆயின. 23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/25&oldid=1524968" இலிருந்து மீள்விக்கப்பட்டது