பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

93


இந்தியர்கள் இறக்கும் வயது 30 அல்லது 35 என்று இருந்த நிலைமை மாறி, இப்பொழுது 60க்கும் மேலாக உயர்ந்து விட்டிருக்கிறது. இன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உலகில் 58 கோடிக்கு மேல் இருக்கிறார்கள் என்றும் கணக்கெடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

மனிதர்கள் வாழும் ஆண்டு நீண்டு கொண்டுபோனது உண்மை தான். ஆனால் மனிதர்கள் புரியாத தெரியாத புதுப்புது நோய்களால், தாக்குண்டு இறந்து போகக் கூடிய நிலைமை சமுதாயத்தில் நிறைய ஏற்பட்டு விட்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை தான்.

அதாவது உடலுக்கு உள்ளேயே உறுப்புக்கள் பாதிக்கப்பட, செயல்பட முடியாத இடர்ப்பாடு, இப்படியாக உடல் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து மறைந்திடும் கொடுமை உருவாகியிருக்கிறது.

இரத்தக் குழாய்கள் கடினத்தன்மை அடைதல், இதயக்குழாய்கள் தடித்துப்போதல், நரம்புகள் நலிவடைந்து போதல், பல உறுப்புக்களில் புற்றுநோய் தாக்குதல் இப்படியாக நாகரிக மனிதர்களின் உடலை முதுமைப்படுத்தி, நிதமும் வதைத்துக் கொல்கின்றன.

இனி, முதுமையானது உடலை எப்படியெல்லாம் முற்றுகையிட்டு வளைத்து வெற்றி பெறுகிறது என்பதைக் கவனிப்போம்.

முதுமை உடலின் வெளிப்புறத்தைத் தாக்கி, உட்புறத்தையும் மாற்றியமைக்கிறது எப்படி என்றால் இப்படித்தான்.

வெளிப்புற மாற்றங்கள்:

பெண்களுக்கு 16 வயது முதல் 18 வயது வரையிலும், ஆண்களுக்கு 18 வயது முதல் 20 வயது வரையிலும் வளர்ச்சி பூரணத்துவம் பெற்றுக் கொள்கிறது. முதுமையிலோ