பக்கம்:புது மெருகு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தச் சர்க்கரை
1

கோயம்புத்தூர் ஜில்லாவில் பழைய கோட்டை என் பது ஒரு பாளையக்கார்ருடைய ஊர். அங்கே உள்ள பாளையக்காரர் கொங்குவேளாளருக்குத் தலை வர். அவரை இக்காலத்தில் பட்டக்காரர் என்று வழங்குவார்கள். அந்தப் பழைய கோட்டையின் ஒரு பகுதிக்கு ஆணூர் என்ற பெயர் முன்பு வழங்கியது.

ஆணூரில் பல வருஷங்களுக்கு முன் (பதினே ழாம் நூற்றாண்டு) சம்பந்தச் சர்க்கரை மன்றாடியார் என்பவர் பாளையக்காரராக இருந்தார். அவர் தமிழ்ப் புலவர்களின் அருமையை அறிந்து பாராட்டிப் பரி சளித்து அவர்கள் உவகை யடைவதைக் கண்டு தாம் உவகை யடைவார். அவருடைய வள்ளன்மையையும் தமிழறியும் இயல்பையும் தெரிந்து பல புலவர்கள் நெடுந்தூரத்திலிருந்து வருவார்கள். வந்து பார்த்துப் பழகிச் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியாரது சல்லாபத் தினாலே அதுகாறும் அடையாத இன்பத்தை அடைந்து, 'நாம் இவரைப்பற்றிக் கேள்வியுற்றது சிறிது; அறிந்துகொண்டது பெரிது' என்று பாராட்டி வியப்பார்கள்.

திருமலை நாயக்கர் மதுரையிலிருந்து அரசு செலுத்தி வந்து காலம் அது. கொங்கு நாட்டில் பெரும் பகுதி அவருடைய ஆட்சியின்கீழ் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/101&oldid=1549610" இலிருந்து மீள்விக்கப்பட்டது