பக்கம்:புது மெருகு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

புது மெருகு

உள்ளத்திலே வளர்த்துவந்தான். காலம் இசைய வில்லை. அவன் துரதிருஷ்டம் இப்போது ஒழிந்தது. புறப்பட்டு நேரே ஆணூருக்குப் போனான். சர்க்கரை ஆணூரை விட்டுச் சங்ககிரியில் சிறைப்பட்டிருக்கும் செய்தியை அவன் அறியான். அறிந்தபோது தன் ஊழ்வினையை நொந்துகொண்டான். "நல்ல காலத் தில் நீங்கள் வந்திருக்கக் கூடாதா? எவ்வளவு புலவர் கள் இங்கே வந்து பரிசு பெற்றுப் போயிருக்கிறார்கள்! இப்போது சிறைக்குள் அந்தக் குரிசில் அடங்கிக் கிடக் கிறார். ஆனாலும் அவர் புகழ் நாடு முழுவதும் விரிந் திருக்கிறது. அதற்கு உங்கள் வரவே தக்க சாட்சி" என்று ஒருவர் சொன்னார். அதைக் கேட்டபோது புலவனுக்குத் துக்கம் பொங்கிவந்தது.

'நமது அதிருஷ்டத்தை முற்றும் சோதித்து விடுவோம். சங்ககிரி துர்க்கத்துக்கே போய் எப்படி யாவது அந்த வள்ளலைப் பார்த்த பிறகுதான் ஊர் போகவேண்டும்' என்று தீர்மானித்துக்கொண்டான் புலவன். "நான் போய்ப் பார்க்கிறேன்" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் நகைத்தார்கள். "ராமப் பையன் அதிகாரம் லேசானதா என்ன? சுக்கிரீ வாக்ஞை அல்லவா? அங்கே போய் உங்களுக்கு ஏதா வது ஆபத்து நேர்ந்தால், அபக்கியாதி எங்கள் தலைவ ருக்கு வரும். பேசாமல் ஊருக்குப் போய்விடுங்கள். நல்ல காலம் வந்த பிறகு ஆண்டவன் அருளால் பிழைத் திருந்தால் ஒன்றுக்குப் பத்தாகச் சம்மானம் வாங்கிப் போகலாம்" என்றார்கள். அவர்கள் வார்த்தைகள் யாவும் தன்னுடைய அதிருஷ்டக் குறைவைக் குத்திக் காட்டுவனவாகவே புலவனுக்கப் பட்டன. 'அந்த வள்ளலைப் பாராமல் ஊர் திரும்பக்கூடாது. அவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/103&oldid=1549612" இலிருந்து மீள்விக்கப்பட்டது