பக்கம்:புது மெருகு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தச் சர்க்கரை

101

கண்ட கண்களைத் தோண்டி எறிய அல்லவா வேண் டும்? நான் பாவி! திருமகள் நடனஞ் செய்த காலத் திலே காணக் கொடுத்துவைக்கவில்லை" என்று புலவன் மனமுருகி நைந்தான்.

"வருந்த வேண்டாம். எல்லாம் அவரவர் வினை ப்பயன். தங்களைத் தக்கவண்ணம் உபசரிக்கக் கொடுத்து வைக்காத பாவி நான் தான். என்னுடைய சுதந் திரத்தை இழந்து சிறைப்பட்டுக் கிடக்கும் இந்தச் சம யத்தில் தங்களை உபசரிப்பதற்கோ, தங்கள் புலமையை அறிந்து பாராட்டுவதற்கோ என்னால் இயன்றதை அளிப்பதற்கோ வழியில்லாமல் இருக்கிறதே!" என்று அந்த உபகாரி இரங்கலானார்.

புலவன் அவருக்கு ஆறுதல் சொன்னான். அப்பால் இருவரும் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று சர்க்கரை வள்ளலுக்கு ஏதோ ஞாபகம் வந்தது; அவ ருக்குத் தெரிந்த சிறை ஏவலாளை அழைத்து ஏதோ சொல்லியனுப்பினார். சிறிது நேரம் கழித்து அவன் தன் கையில் எதையோ மூடிக் கொணர்ந்து பிரபுவின் கையில் கொடுத்தான். அவர் புலவனை நோக்கி, "இந்த இடத்திலே என்னால் உதவ முடிந்தது இது தான். என்னுடைய ஞாபகத்துக்கு அடையாளமாக இதை வைத்துக் கொள்ளவேண்டும்" என்று அந்தப் பொரு ளைப் புலவன் கையிலே கொடுத்தார்.

புலவன் அதைப் பார்த்தான். அது ஒரு பொற் றாலியாக இருந்தது. புலவனுக்குத் திடுக்கிட்டது; மயிர்க் கூச்செறிந்தது; உடம்பெல்லாம் வேர்த்தது. "என்ன இது?" என்று பதறிப்போய்க் கேட்டான்.

"என் மனைவி இவ்வூரில் தங்கியிருக்கிறாள். அவளுக்குச் சொல்லியனுப்பினேன். அவள் இதை அனுப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/106&oldid=1549615" இலிருந்து மீள்விக்கப்பட்டது