பக்கம்:புது மெருகு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

புது மெருகு

வரக்கூடாதா?" என்று ஆவலாக வினவினான் காங்கேயன்.

"மீட்டும் கம்பர் அந்த நாட்டிற் பிறந்தால் வரக்கூடும்!"

"இது சாத்தியமா? அவ்வளவு புகழ் இல்லாவிட்டாலும் 'நம்முடைய நாட்டிலும் ஒரு ராமாயணம் பிறந்தது' என்ற புகழை அடைய முடியாதா?"

காங்கேயன் கருத்து என்னவென்று ஆராய்வதில் புலவர் மனம் சென்றது; அவர் மௌனமாக இருந்தார்.

"என்ன, கொங்கு நாட்டிலும் ஒரு புலவர் ராமாயணம் ஒன்றை இயற்றினார் என்ற புகழை இந்த நாட்டுக்கு அளிக்க முயல்வது கடினமான காரியமா?"

புலவருக்குக் காங்கேயன் கருத்து விளங்கிவிட்டது. அவர் புன்னகை பூத்தார். காங்கேயனும் புன்முறுவல் செய்தான்.

"என் கருத்தை உணர்ந்துகொண்டீர்களென்று நினைக்கிறேன். அந்தப் புகழை உண்டாக்க..."

"நான் முயல்வேன்" என்று உற்சாகத்தோடு சொல்லி வாக்கியத்தை முடித்தார் கவிராயர்.

"சந்தோஷம்! நல்லது; பெரும் பாக்கியம். இந்த நாட்டின் அதிருஷ்டம்! உங்கள் திருவாக்கினால் ஒரு ராமாயணம் வெளியாக வேண்டுமென்று நான் பல நாளாக ஆசைகொண்டிருந்தேன். அந்த விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல அஞ்சினேன். கம்பராமாயணத்திலே ஊறி நிற்கும் உங்களுக்கு எல்லா வகையான தகுதிகளும் இருக்கின்றன. நீங்கள் மனம் வைத்தால் எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/113&oldid=1549630" இலிருந்து மீள்விக்கப்பட்டது