பக்கம்:புது மெருகு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

புது மெருகு

அத்தனை பேச்சுக்கும் விரோதமான கருத்து; அது மட்டுமா?

"மாதர், அறிவில் முதியரே யாவர்."

இதென்ன வெட்கக் கேடு? பெண்கள் அறிவில் ஆடவர்களைக் காட்டிலும் - அவர்களைக் காட்டிலும் - முதியவர்களாம்! இதற்கு என்ன ஆதாரம்?

"அறி கரியோ?"

இதை அறிந்துகொள்வதற்குச் சாட்சியா? இதோ

"தாம்கொண்ட சூலறிவர் தத்தையர்; ஆண்மக்கள், தாம்கொண்ட சூலறியார் தாம்."

சாஸ்திரங்களிலும் பழைய நூல்களிலும் சொல்லப்பட்ட ஒரு தத்துவத்தை ஆதாரமாகப் பாட்டு எடுத்துக் காட்டுகிறது. உயிர் தாயினுடைய கர்ப்பத்திலே புகுவதற்கு முன்பு இரண்டு மாதங்கள் தகப்பனுடைய கர்ப்பத்திலே இருக்குமென்று அந் நூல்கள் சொல்கின்றன. மாதர் தாம் கர்ப்பமுற்ற செய்தியை அறிந்துகொள்வார்கள். ஆடவர்களோ தம்மிடத்தில் உயிர் தங்கியிருப்பதை அறிய முடிவதில்லை. இந்த விஷயத்தில், அதாவது தமக்குச் சூல் உண்டாகியிருக்கிறது என்று அறிந்துகொள்வதில் ஆடவர், பெண்களிலும் தாழ்ந்தவர்களே. அதைத்தான் அந்த வெண்பாவின் பிற்பகுதி சொல்லுகிறது.

திண்ணையில் இருந்த வித்துவான்கள் அந்தப் பாடலின் ஒவ்வோர் அடியையும் கவனித்துப் பார்த்தார்கள். முன்னே ஆரவாரித்துப் பெண்களை இழித்துப் பேசியதற்கு நாணமடைந்தார்கள்.

"இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது?" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/117&oldid=1549635" இலிருந்து மீள்விக்கப்பட்டது