பக்கம்:புது மெருகு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

புது மெருகு

கிறார். பார்க்கலாம் இவர்களுடைய வீரத்தை ! மூங்கி லரிசி தின்று வயிறு நிரம்புமா? குடிகள் யாவரும் தின்பதற்கு அது போதுமா? பலாப்பழத்தைத் தின் றால் வீரம் வருமா? இவர்களுடைய பறம்பு வளம் வெறும் வாய்ப் பந்தல் தான். இன்னும் சில காலம் முற் றுகையிட்டால் அந்த வளம் எப்படி இருக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம். பலாப்பழம் எப்பொழுதும் பழுக்காது; மூங்கில் ஒவ்வொரு நாளும் விளை யாது. இந்தக் கோடை வரட்டும்; வள்ளிக் கிழங்கு இவர்களுக்குக் கிடைப்பதைப் பார்க்கலாம் "என்று ஏளனக் குரலோடு பேசினான் சோழன்.

முற்றுகையைத் தளர்த்தாமல் இருந்தனர் மூவரும்.படைகளையெல்லாம் அங்கே காவல் புரிய வைத்துத் தங்கள் தங்கள் நகரத்திற்குச் சென்றனர். இடையிடையே வந்து சில காலம் தங்கிப் படைத் தலைவர்களுக்கு ஊக்கமளித்தனர்.

நாட்கள் சென்றன; வாரங்கள் கடந்தன; பல மாதங்கள் கழிந்தன. பறம்பு மலை நின்றது; அதனை முற்றுகையிட்ட படைகளும் அதனடியிலே கிடந்தன; வீணே சோறுண்டு பொழுதுபோக்கிக் கிடந்தன.ஒரு வருஷம் ஆயிற்று; இரண்டாண்டுகள் கடந்தன. அங்குள்ள படைகள் நிலைப்படைகளாயின; போர் செய்வதைக்கூட மறந்துபோயிருக்கலாம்.

பறம்பு மலையின்மேல் உள்ளவர்கள் வாழ்வு எப்படி இருந்தது? குடிகளுக்கு உழவர் உழாத நான்கு உணவுகள் கிடைத்தன. ஆயினும் நெல்லஞ் சோற்றை உண்டு பழகினவர்களுக்கு மூங்கிலரிசிச் சோறு செல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/29&oldid=1548624" இலிருந்து மீள்விக்கப்பட்டது