பக்கம்:புது மெருகு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'மூங்கிலிலே மேலே'

75

ஏற்றக்காரனுடைய எளிய பாடலைக் காதுகொடுத்துக் கேட்கலானார்.

அந்த மாலை வேளையில் ஏற்றக்காரன் காலைக் காட்சியை வருணிக்கும் ஒரு பாட்டைப் பாடிக்கொண் டிருந்தான்.

"மூங்கிலிலை மேலே"

என்று அவன் அந்தப் பகுதியை ஆரம்பித்தான். இயற்கை எழிலின் கவர்ச்சியை முற்றும் உணர்ந்த கம்பர் இயற்கையோடு கலந்து மகிழ்ந்து தொழில் புரிந்து ஆடிப் பாடும் அந்த மக்களின் இயல்பையும் நன்கு உணர்ந்தவர். கற்பனையும் அலங்காரமும் செறிந்த கவிதையை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை. குழந்தையின் மழலைப் பேச்சைப்போல மழலைப் பரு வத்தில் அமைந்த பாட்டைத்தான் அவர் எதிர்பார்த் தார். அதுதான் அங்கே எழுந்தது.

வானை அளாவிய மூங்கில், அதன் இலை, இரண் டையும் அந்தச் சிறிய அடி - அரை அடி - கம்பர் கருத் திலே நட்டுவிட்டது. அவர்தாம் கருத்தினால் உலகை அளப்பவர் ஆயிற்றே!

"மூங்கிலிலை மேலே
தூங்கு பனி நீரே"

என்று ஏற்றக்காரன் அடி முழுவதையும் சொன் னான். அந்த அடியில் ஓர் அழகிய சித்திரம் பூர்த்தி யாயிற்று.

விடியற்காலையில் ஓங்கி உயர்ந்த மூங்கிலின் நீண்ட இலைத் தொட்டிலிலே ஒரு சிறு பனித் துளி தூங்குகின்றது! என்ன அழகான இயற்கை! ஆலிலையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/80&oldid=1549288" இலிருந்து மீள்விக்கப்பட்டது