பக்கம்:புது மெருகு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுஞ் சுவர்

83

இந்த நிலையில், 'நான்தான் கம்பர்; சோழ நாட்டுப் பெரும்புலவர்' என்று தாமே சொல்லிக்கொண்டு பிறருடைய ஆதரவைப் பெறுவது என்பது முடியுமா? கால் நடந்த வழியே சென்றார். தர்மம் நிறைந்த தமிழ்நாட்டில் அவர் ஓர் இரவலராகச் சென்றிருந்தால் எவ்வளவோ உபசாரத்தைப் பெற்றிருக்கக் கூடும். அப்படிச் செல்வதற்கு அவர் உள்ளம் துணியவில்லை.

முகம் அறியாத வேற்று நாட்டில் யாரோ பரதேசியைப் போலப் பிரயாணம் செய்துகொண் டிருந்த அவருக்கு விசித்திரமான எண்ணம் ஒன்று தோன்றியது. 'நாம் ஒருவரிடம் சென்று நம்முடைய புலமையைக் காட்டி உபசாரம் பெறுவது கூடாது. அவர்களாக நம் பெருமை தெரிந்து வந்தால்தான் நமக்கு மதிப்பு. நம்முடைய கவிதையின் உதவி இல்லாமலே நாம் உலகத்தில் வாழ முடியாதா? கவிதையை அடகு வைத்துப் பிழைப்பதைக் காட்டிலும் உடம்பினால் உழைத்துக் கூலி வேலை செய்து பிழைப்பது எவ்வளவோ மேலானது. நாம் எப்போதும் இந்த நிலையில் இருக்கப்போவதில்லையே! யாரும் அறியாமல் சாமான்ய மனிதனைப்போல உலவுவதென்பது நம்மைப் போன்றவர்களுக்குக் கிட்டாத பதவி. இன்னும் சில நாட்களுக்குள்ளே இந்த நாட்டிலும் நமக்கு அன்பர்கள் சேர்ந்துவிடுவார்கள்.

'அத்தகைய மதிப்புக்குரிய நிலை வருவதற்கு முன் நம்மை நாமே சோதித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய கைகளும் கால்களும் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றன என்று தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/88&oldid=1549351" இலிருந்து மீள்விக்கப்பட்டது