பக்கம்:மயில்விழி மான்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தப்பிலி கப்

115

தான் பாக்கியிருந்தது. "ஏறுங்கோ, சார் ஸ்டார்ட்!" என்றான் கண்டக்டர். ஆனால் ராஜகோபலன் ஏறவில்லை. வண்டியின் முன் பக்கத்தில் இரண்டு தடித்த மார்வாரி சேட்டுகளுக்கு மத்தியில் உட்கார்ந்து திணறிக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து, "அடே சீனு ஒரு சமாசாரம் இறங்கு கீழே!" என்றான். நல்ல வேலை என்று எண்ணிக் கொண்டு கீழிறங்கினான் சீனு.

"என்ன சமாசாரம்?" என்றான்.

"ஒன்றுமில்லை...."

"ஒன்றுமில்லையா? பின் எதற்காக என்னை இறக்கினாய்?"

"அடே அப்பா! கோபித்துக் கொள்ளாதே! இங்கே வா சொல்கிறேன்" என்று ராஜு சீனுவைச் சிறிது ஒதுக்குப் புறமாய் அழைத்துக் கொண்டு போய், "சட்டைப் பையைப் பார். எவ்வளவு சில்லறை இருக்கிறது?" என்று கேட்டான்.

சீனு எண்ணிப் பார்த்தான். ஐந்தரை அணா இருந்தது. "நல்ல வேளை! நீ வந்து இருக்கிறாய். இல்லாவிட்டால் அவமானம்" என்றான். பஸ்ஸுக்கு எட்டணா கூலி. "இரண்டு பேருக்கும் ரெயிலுக்காவது இருக்கிறதே" என்றான் ராஜகோபாலன். இருவரும் கை கோர்த்துக் கொண்டு போய் டிக்கெட் வாங்கி ரெயில் ஏறினார்கள்.

ரெயில் நகர ஆரம்பித்தது. சீனுவின் எதிரில் துக்கமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.