அரசியல்.
௯௩-ம் அதி.–ஆகா நட்பு.
ஆகா நட்பிவ ணழிவுபழி தருவது.
௯௨௧
அவைநனி தருபவ ரறிவில் பேதையர்;
௯௨௨
உறுவதே தூக்குஞ் சிறுமைமிகு மாந்தர்;
௯௨௩
வினையொடு தஞ்சொல் வேறுபடு வஞ்சகர்;
௯௨௪
ஒல்லுங் கரும முஞற்றாக் கள்ளர்;
௯௨௫
மிகைபல விழைத்து நகைசெய்யும் பகைவர்;
௯௨௬
பக்கத் துறைந்து பதம்பார்த் திருப்பவர்;
௯௨௭
அட்டைபோ லொட்டிநின் றரியவை கவர்வோர்;
௯௨௮
கள்ளுங் கவறுங் கைவிடாப் பதகர்;
௯௨௯
விடருந் தூர்த்தரு நடருமுள் ளிட்டோர்.
௯௩0
௯௪-ம் அதி.–இகல்.
இகலெனப் படுவ துளமாறு பாடு.
௯௩௧
நகறரு நட்பிற் கிகன்மறு தலையாம்.
௯௩௨
அதனிய லடுத்தவ ரழமனம் விரும்பல்;
௯௩௩
இடருற மொழித லிடுக்கண் புரிதல்.
௯௩௪
எதிருணர் வழுக்கா றிறுகுளத் தால்வரும்.
௯௩௫
இகலுள மென்று மெரிந்து துன்புறும்.
௯௩௬
அன்போ தட்பமோ வின்போ வுறாது.
௯௩௭
இகல்பா ராட்டுவார் தகல்காண் பரிது;
௯௩௮
அருமைச் சுற்றமு மாக்கமு மிழப்பர்;
௯௩௯
கேடு மழிவுங் கிளைகளாக் கொள்வர்.
௯௪0
49
7