பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218


(2) வடக்கு கச்சார் தன்னாட்சி மன்றத்தாலும் கர்பி ஆங்குலாங்கு தன்னாட்சி மன்றத்தாலும் 3ஆம் பத்தியின்படி அல்லது இந்தப் பத்தியின்படி வகுக்கப்பட்ட விதிகள் அனைத்தும் ஏழாம் இணைப்புப்பட்டியலின் III ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளுக்கு அவை எந்த அளவுக்குத் தொடர்புடையதாக இருக்குமோ அந்த அளவுக்கு, ஆளுநரிடம் உடனடியாகப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும், அவர் அதை குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக அனுப்பிவைத்தல் வேண்டும்.

(3) அந்தச் சட்டம் குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கி வைக்கப்படும் போது, மேற்சொன்ன சட்டத்திற்குத் தான் இசைவளிப்பதாக அல்லது இசைவளிப்பதை நிறுத்தி வைப்பதாக குடியரசுத்தலைவர் விளம்புதல் வேண்டும். வரம்புரையாக: குடியரசுத்தலைவர், வடக்குகச்சார் குன்றுகள் தன்னாட்சி மன்றம் அல்லது நேர்வுக்கேற்ப கர்பி-ஆங்குலாங்கு தன்னாட்சி மன்றத்திற்கு அந்தச் சட்டத்தை திருப்பியனுப்புமாறு, மேற்சொன்ன மன்றம் அந்தச் சட்டத்தை அல்லது அதன் குறித்துரைக்கப்பட்ட வகையங்களுள் எவற்றையும் ஓர்வு செய்தல் வேண்டும் என்ற தகவலுடன் சேர்த்து ஆளுநரைப் பணிக்கலாம் மற்றும் குறிப்பாக அந்தத் தகவலில் அவர் பரிந்துரை செய்யலாகும் திருத்தங்கள் எவற்றையும் கொணரும் விருப்பத்தினை ஓர்வு செய்யுமாறும் அந்தச் சட்டம் திருப்பியனுப்பப்படும்போது மேற்சொன்ன மன்றம், அந்தத் தகவலினை அவர் பெற்ற தேதியிலிருந்து ஆறு மாத காலஅளவிற்குள் அதற்கேற்ப அந்தச் சட்டத்தைப் ஓர்வு செய்தல் வேண்டும் மற்றும் திருத்தத்துடனோ, திருத்தமின்றியோ அந்த மேற்சொன்ன மன்றத்தால் அந்தச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டால், அது மீண்டும் ஓர்வுக்காக குடியரசுத்தலைவருக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.]

[1][3ஆ. சட்டங்களியற்றுவதற்கு போடோலாந்து ஆட்சிநிலவரை மன்றத்திற்குள்ள கூடுதல் அதிகாரங்கள் : (1) 3ஆம் பத்தியின் வகையங்களுக்குக் குந்தகமின்றி, போடோலாந்து ஆட்சிநிலவரை மன்றம், அதன் வரையிடங்களுக்குள், பின்வருவன குறித்து சட்டங்களியற்ற அதிகாரம் உடையது ஆகும்:-

(i)வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி, பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான பாதுகாப்பு, பயிர் நோய்த் தடுப்பு உள்ளடங்கலாக, வேளாண்மை;
(ii)கால்நடைப் பேணுகை மற்றும் கால்நடை மருத்துவம், அதாவது, கால்நடைகளைப் பேணுதல், பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் விலங்கு நோய்த்தடுப்பு, விலங்கின மருத்துவப் பயிற்சியும் தொழிலும், கால்நடைப் பட்டித்தொழுவங்கள்;
(iii) கூட்டுறவு;
(iv)பண்பாடு பற்றிய பொருட்பாடுகள்;
(v)கல்வி, அதாவது தொடக்கக்கல்வி, உறுதொழில் பயிற்சி உள்ளடங்கலாக உயர் கல்வி, முதிர்வயதினர் கல்வி, கல்லூரிக் கல்வி (பொது)
(vi)மீனளங்கள்;
(vii)கிராமம், நெல் வயல்கள், அங்காடிகள், நகரங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காக (தொழில் நுட்பத் தன்மையதல்லாத) வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல்
(viii)உணவு மற்றும் குடிமை நுகர்பொருள்கள் வழங்கல்;


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தால் (44/20003) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/244&oldid=1467234" இலிருந்து மீள்விக்கப்பட்டது