பக்கம்:அஞ்சலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 லா. ச. ராமாமிருதம்

விழிப்பு வந்தபோது அந்தியிருள் கூடத்தில் கவித்திருந்தது. மாஞ்சி ஏதோ காரியமாய் கூடத்தில் நடமாடுவது தெரிந்தது. திடீரென்று குளுமையான ஒளியில் கூடம் அகன்று விரிந்தது.

தன் நினைவைக் கூட்டி ஊன்ற முயன்றான்.

மாஞ்சி குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள். திரியைத் தூண்டி விளக்கை ஏற்றிவிட்டு அவனண்டை வந்து உட்கார்ந்து, தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக்கொண்டாள்.

அப்பா! அவன் கண்ணிர் மடையுடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/108&oldid=1033442" இலிருந்து மீள்விக்கப்பட்டது