பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரார்த்தனை

53


“வாசலிலே இருந்தால், தெருக் கதவைச் சாத்தவேண்டாமா, எது எதுகளோ மொட்டையும், கட்டையும், கடையிலே நிற்கிறதே” என்று தாயம்மாள் கூறுவாள். அன்னத்தின் முகம் சுளிக்கும். “பைத்தியக்காரி! உன் நன்மைக்குத்தாண்டி. நான் சிறுசா இருக்கச்சே அந்தக் குடிகெடுப்பான். கொஞ்சி என்னைக் கெடுத்ததாலேதான் நான் இந்தக் கதிக்கு வந்தேன், உலகம் ரொம்ப கெட்டது. பார்த்துப் பிழைக்க வேண்டுமடி” என்று புத்தி கூறினாள், “அவர் மொட்டையுமல்ல, கட்டையுமல்ல” என்று அன்னத்தின் மனம் சொல்லிற்று ; வாய் திறக்கத் துணிவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, கண்டிராக்டர் ஒரு நண்பருடன், தாயம்மாள் வீட்டுக்கு வந்தார். வருகிறபோதே கொஞ்சம் டிகிரிதான்! கையிலேயும் கொஞ்சம் எடுத்து வந்திருந்தார்.

அவருடைய மனம் கோணும்படி தாயம்மாள் நடக்க முடியுமா? நடந்தால், வாழ்க்கை கோணலாகிவிடுமே? ஆகவே, வருகிறவன் குடித்துக் குளறினால், இவளும் அது போலவேதான் செய்வாள். அன்னம் பருவத்துக்கு வந்த பெண், துணையாக இருந்த தாத்தாவும் செத்து விட்டார். எனவே, அன்னத்தைப் பொழுதோடு சாப்பிட்டு விட்டு. ரூமிலே கதவைத் தாள் போட்டுக்கொண்டு படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு, கண்டிராக்டர் கொண்டுவந்த ரசங்களைப் பருகுவதிலே ஈடுபட்டாள். போதை மூவருக்கும் ஏறிவிட்டது. பேச்சும், சிரிப்பும், பலமாகி விட்டது. புதிதாக வந்தவன் கைகாரப் பேர்வழி என்பது அவனது பேச்சினாலே தெரிந்தது. வாலிபன், கண்டிராக்டரின் நண்பன். அன்றையச் செலவு அவனுடையது. காரணத்தோடுதான் அத்தச் செலவு செய்தான். காமக் கள்ளன்.

நடு நிசி வரையிலேதான் தாயம்மாளும் கண்டிராக்டரும் குளறிக் கொண்டாவது இருக்க முடிந்தது. அதற்கு மேல் அவர்கள் சாய்ந்து விட்டனர், மரம்போல்.

வந்த கள்ளன் போதை ஏறியவன் போல் இருந்தானே தவிர, உண்மையிலே கொஞ்சம் சுறுசுறுப்பு வரும் அளவுக்-