பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

கண்மூடித்தனமாக நடந்து, காமக்களியாட்டங்களில் ஈடுபட்ட மற்ற கடவுளையும் திருமணக் காலங்களிலே எண்ணுவதும் கூடாதே! இவைகளை நாம் கூறும்போது சில ஆத்திக நண்பர்களுக்குக் கோபம் ஏற்படலாம்! கோபம் ஏற்பட்டு என்ன பலன்? நாங்களாகக் கதைகட்டி எதையும் கூறவில்லையே!

நாங்கள் எடுதுக்காட்டி விளக்குவதும் ஆபாசங்கள் என்று கூறிக் கண்டிக்கும் ஆண்டவன் திருவிளையாடல்களும் எங்கள் கற்பனைகள் அல்லவே அல்ல! அவைகள் அத்தனையும் பக்தர்கள் பக்தியோடு படித்துப் பாராயணம் செய்து வரும் புராணங்களில் காணப்படுபவைகள் தான என்பதை ஆத்தீக நண்பர்கள் உணர்ந்து திருத்தவேண்டுகிறேன்.

கடவுள் என்றும், மதம் என்றும், சாஸ்திர சடங்குகள் என்றும், மக்கள் தங்கள் காலத்தையும் கருத்தையும், நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும், ஊக்கத்தையும், பணத்தையும், பகுத்தறிவையும் சிறிதும் பயன்படுத்தாது பாழாக்குவதைத் தடுத்தாகவேண்டும்!

பழைய காலத்தைப்போல நாம் நடக்க முடியாது நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.

மக்களைப் பழமைப் பிடியிலிருந்து மீட்டு, பகுத்தறிவுப் பாதையில் நடத்திச் செல்ல திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதும் பாடுபட்டு வருகின்றது.

பழமைக் கருத்துக்களையும், மத மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும், கண்மூடி வழக்கங்-