பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


'அக்கரை'யில் மூதாட்டியின் மணி!

இங்கு இந்த எலும்புக் கூடு!

இடையே, நாடு, காடு, மலை, வனம், வனாந்திரம், கடல்!

எண்ணம், விநாடியிலே எதையும் தாண்டும், எலும்புக்கூடு. எங்கே அந்தச் சக்தியைப் பெறுவது! புதைக்குழிக்குச் செல்லவே சக்தியில்லை!

யாராவது கிடைக்கமாட்டார்களா என்று தேடித் தேடி அலுத்துப்போய், தன் குடிசையில் போய்ச்சுருண்டு விழுந்துவிடுவது வாடிக்கை.

சொந்தக் குடிசைதான்!

அது வேறு யாருக்கு வேண்டும்?--அதனால் கிழவியிடமே இருந்தது!

சரிந்துபோன சுவர். பிய்ந்துபோன கூரை...அதன் நிலைமையும் கிழவியின் கோலமும் ஒரேவிதம்.

அக்கரையில், 'மணி' 'மார்க்' ஆகி; மாதா கோவில் தோட்டத்தில வேலை செய்து ஒடிந்துபோய், பிறகு உல்லாச உலகுக்கு'க் கயவன் ஒருவனால் இழுத்துச் செல்லப்பட்டு, கள்ளாகி, அடிபட்டு, உதைபட்டு, செத்தும் போய் விட்டான்.

மூதாட்டிக்கோ, 'மணி' மளிகைக் கடை வைத்திருக்கிறானோ, மலர்த்தோட்டத்திலே வேலை பார்க்கிறானோ, மாடு மனை மனைவியோடு சுகமாக இருக்கிறானோ...எவ்விதம் இருக்கிறானோ என்ற எண்ணம். நல்லவிதமாகத்தான்