பக்கம்:அறப்போர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அதியமான் செய்யும் உபசாரத்தைப் பெற்றால் மாதக் கணக்காக, ஆண்டுக் கணக்காக அங்கேயே இருந்து விடலாமென்று தோன்றும்.

ஔவையார் தங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் புலவரும் பாணரும் விறலியரும் கூத்தரும் வந்து வந்து அதியமானிடம் பரிசு பெற்றுச் சென்றார்கள். அவனுடைய ஈகைத் திறத்தைக் கண்டு கண்டு ஔவையார் கண் களித்தார்.

ஒரு புலவர் முதல் நாள் வந்து பரிசு பெற்றுச் சென்றார். மறு நாளும் அவர் வந்தார். அவரைக் கண்டதும் அரண்மனையில் இருந்தவர்களில் ஒருவர், “நேற்றுத்தானே வந்தீர்கள்?” என்று கேட்டார். புலவர், “ஆம்.” என்றார். அதியமானிடம் அவர் சென்றார். “நேற்று வந்து பரிசில் பெற்றுச் சென்றவர்” என்று யாரோ சொன்னது அதியமான் காதில் விழுந்தது.

“இருந்தால் என்ன? நேற்றும் உணவு கொண்டோம். அது போதுமென்று நிற்கிறோமா? இன்றும் உணவு கொள்கிறோம். ஒரே நாளில் இரண்டு மூன்று தடவை உணவு கொள்கிறோமே, அது தவறு? ஒவ்வொரு நாளும் நாம் ஒருவருக்குப் பரிசில் தருவது

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/114&oldid=1267486" இலிருந்து மீள்விக்கப்பட்டது