பக்கம்:அறப்போர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவரின் வள்ளன்மை


“உங்களை நான் தெரிந்து கொள்ளாமல் இருந்தது. தவறு என்று உங்களைக் கண்ட அன்று நினைத்தேன். இன்றோ, நான் உங்களோடு பழக நேர்ந்தது தவறு என்று நினைக்கிறேன். உங்களோடு பழகியதனால் உங்கள் புலமையை உணர்ந்தேன். உங்களோடு சில நாள் சேர்ந்து வாழும் பேறு பெற்றேன். எப்போதும் நீங்கள் என்னுடனே தங்கியிருப்பீர்கள் என்ற எண்ணம் என்னை அறியாமலே என்னுள்ளே ஒளித்திருந்தது. இப்போது அந்த எண்ணம் தவறு என்று தெரிகிறது. நீங்கள் எத்தனையோ செல்வர்களைப் பார்ப்பீர்கள். முடியுடை மன்னர்கள் உங்களை வரவேற்று உபசரிக்கக் காத்திருக்கிறார்கள். ஆகவே என்னைப் பிரிவதனால் உங்களுக்குத் துன்பமோ, குறைவோ யாதும் இல்லை. எனக்குத்தான் உங்களைப் பிரிவது மிக்க துன்பத்தை விளைவிக்கிறது. உங்களைத் தெரிந்து கொள்ளாமலே யிருந்திருந்தால் இந்தத் துன்பம் உண்டாக நியாயம் இல்லை அல்லவா? எப்படியானாலும் நீங்கள் போகத்தான் வேண்டும். உங்களைத் தடை செய்ய நான் யார்? ஆனால் ஒன்று விண்ணப்பம் செய்து கொள்கிறேன். உங்கள் திருவுள்ளத்தில் எனக்கும் ஓரிடம் கொடுக்க வேண்டும். அடிக்கடி இங்கே வந்து சில நாட்-

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/133&oldid=1267507" இலிருந்து மீள்விக்கப்பட்டது