பக்கம்:அறப்போர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பொருதலும் முதலியனவாம்' (தொல்காப்பியம் புறத்திணையியல், 10) என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார். போர் தொடங்கியது முதல் முடிவு வரையில் இத்தகைய அறச் செயல்கள் பல போர்க்களத்தில் நிகழ்வதைத் தொல்காப்பியத்திலும், புறப் பொருள் இலக்கணங்களை வகுக்கும் பிற நூல்களிலும் உள்ள செய்திகளால் அறியலாம்; புற நானூறு முதலியவற்றில் போரிடையே இத்தகைய அறச் செயல்களைச் செய்த வீரப் பெருமக்களின் வரலாற்றைக் குறிப்பிடும் செய்யுட்கள் பல உண்டு.

போர் தொடங்கப் போகிறது. ஒரு நாட்டின் அரசன் தான் பகைவனை எதிர்த்துப் போர் செய்யப் போவதைத் தன் வீரர்களுக்கு அறிவிக்கிறான்; முரசறைந்து அறிவிக்கிறான். அதுகேட்டு வீரர்களுடைய தினவெடுத்த தோள்களெல்லாம் பூரிக்கின்றன. போர் என்ற சொல்லைக் கேட்டாவே அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.

பகைவர் நாட்டில் உள்ள மக்கள் யாவரையும் அழிக்கவேண்டு மென்பது அரசனது நோக்கம் அன்று. பிறருக்குத் தீங்கு செய்யாதவர்களையும், தமக்குப் பின் குடிகாத்து ஓம்பும் மக்களைப் பொதவர்களையும் கொல்வது தீது.

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/40&oldid=1267413" இலிருந்து மீள்விக்கப்பட்டது