பக்கம்:அறிவியல் அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



dis

125

diu


வளர்சிதை மாற்றத்தின் சிதை பகுதி. இதில் திசுக்களில் உணவுப் பகுதிகள். உயிர்வளி ஏற்றம் பெறுவதால், வேலை செய்வதற்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கிறது. (உயி)

disproportionation - வேறுபடு வினை: ஒரே பொருளின் ஏற்றமும் இறக்கமும் ஒரே சமயம் நடைபெறும் வினை. செம்புக்குளோரைடு - செம்பு + செம்பகக் குளோரைடு. 2CuCl→Cu+CuCl2. (வேதி)

dissociation - பிரிதல்: ஒரு மூலக்கூறு இரு முலக்கூறுகளாகவும் அணுக்களாகவும் படி முலிகளாகவும் பிரிதல். இவ்வினையின் நடுநிலைமாறிலி பிரிகைமாறிலி ஆகும். (வேதி)

distance - தொலைவு: இரு புள்ளிகளுக்கிடையே உள்ள வழி. எஸ்ஐ அலகு மீட்டர். இது ஒரு நேர்க்கோடாக அளக்கப்பட வேண்டியதில்லை. இது அளவு சார் அளவாகும். ஆனால், இடப் பெயர்ச்சி திசைச்சாரி அளவாகும். ஒ speed, velocity.

distance of distinct vision - தெளிவுப் பார்வைத் தொலைவு: 25 செ.மீ. தொலைவிலுள்ள பொருள்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். இத்தொலைவே தெளிவுப் பார்வைத் தொலைவு. இத்தொலைவு குறையுமானால், பொருள்களைப் பார்க்க வில்லையின் பருமன் அதிகமாக்க வேண்டும். (உயி)

distance ratio - தொலைவு வீதம்: நேர்விரைவுத் தகவு, குறிப்பிட்ட நேரத்தில் திறனால் நகர்ந்த தொலைவுக்கும் அதே நேரத்தில் எடையினால் நகர்ந்த தொலைவுக்குமுள்ள வீதமாகும். இது எந்திரச் சார்பாகக் கூறப் பெறுவது.(இய)

distillation - வடித்துப் பகுத்தல்: ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. இதில் நீர் ஆவியாகி, ஆவி மீண்டும் குளிர்வதால் கரைசலிலுள்ள நீர்மம் தனியாகப் பிரிகிறது. இதற்கு வடிபொருள் என்று பெயர். (வேதி)

distilled water - வடித்த நீர்: காய்ச்சி வடித்தல் மூலம் துய்மை செய்யப்பட்ட நீர் ஊசி மருந்து கலக்கவும் வேதி ஆய்வு செய்யவும் பயன்படுவது. (வேதி)

disulphide - இருசல்பைடு: ஒரு மூலக்கூறு கந்தகத்தில், ஈரணுக்கள் உள்ள சல்பைடு. எ-டு. கரி இரு சல்பைடு. இச்சல்பைடில் கந்தகம் கரையும். (வேதி)

diurectic - நீர்ப்பெருக்கி: சிறு நீரகத்தின் செயலை ஊக்குவிக்கும் கூட்டுப்பொருள். (உயி)

diuresis - நீர்ப்பெருக்கு: சிறுநீரகத்தினால் சிறுநீர் அதிகமாகச் சுரக்கப்படுதல். இது மனஎழுச்சியினால் இயற்கையாக இருக்கலாம். அல்லது நச்சுக்கலப்பின் பொழுது, அதற்காக மருந் துண்ணும் நிலையில் செயற்கை