பக்கம்:அறிவியல் அகராதி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sal

378

sam


பரப்பு அம்புத்தலை போன்று இருக்கும், அதன் இருமடல்கள் கீழ்நோக்கி அமைத்திருக்கும். எ-டு சேஜிடேரியா. (உயி)

salamander - சலமாந்தர்: வாலுள்ள இருநிலைவாழ்வி. 15செமீ நீளமுள்ளது. தீங்கற்றது. ஈரமுள்ள மென்மையான உடல். இதன் இளரி புறச் செவுள் பெற்று நீரில் வாழ்வது. முதிரி நிலத்தில் வாழ்வது. (உயி)

sal ammoniac - நவச்சாரம்: அம்மோனியம் குளோரைடு ஈயம் பூசவும் சாயத்தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

salinity - கரிப்பு: கடல்நீரின் உப்படக்க அளவு. (வேதி)

salinometer - உப்புச்செறிவுமானி: உப்புக் கரைசல்களின் செறிவை உறுதி செய்யப் பயன்படும் ஒரு வகை நீர்மானி. அக்கரைசல்களின் அடர்த்தியை அளப்பதன் மூலம் செறிவை உறுதிசெய்யலாம். (வேதி)

saliva - உமிழ்நீர்: உமிழ்நீர்ச்சுரப்பி சுரப்பது.

salivary glands - உமிழ்நீர்ச்சுரப்பிகள்: வாய்க்குழியிலுள்ள சுரப்பிகள். வாயை உமிழ்நீர் ஈரமாக வைப்பதால்தான் நாம் பேசமுடிகிறது. இதிலுள்ள டயலின் என்னும் நொதி ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்குகிறது. (உயி)

Salk vaccine - சால்க் ஆவைன்: இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிரி இயலார் டாக்டர் ஜே. ஈ. சால்க் (1914 ) மற்றும் இவர் தம் குழுவினரால் உருவாக்கப்பட்டது.

sal soda - சால்சோடா: Na2CO3. 10H2O. சோடியம் கார்பனேட்டு டெக்கா ஹைடிரேட்டு சலவைச்சோடா. (வேதி)

salt - உப்பு: கார காடி வினையால் உண்டாகும் சேர்மம். இவ்வினைக்கு நடுநிலையாக்கல் என்று பெயர். இதில் காரமும் காடியும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்கின்றன.

உப்பின் வகைகளாவன. 1. இயல்பான உப்புகள்: பொட்டாசியம் குளோரைடு 2. காடியுப்புகள்: சோடியம் இருகார்பனேட்டு. 3. கார உப்புகள்: காரக்காப்பர் கார்பனேட் 4. கலப்பு உப்புகள்: சோடியம் பொட்டாசியம் சல் பேட்டு, 5. இரட்டை உப்புகள்: பொட்டாஷ் படிகாரம் 6. அணைவு உப்புகள்: பொட்டாசியம் பெரோசயனைடு.

salt petre - வெடியுப்பு: KNO3. பொட்டாசியம் நைட்ரேட்டு. காற்றிலுள்ள நீரை ஈர்க்கும் பொருள். நீரில் கரைவது. கரிம வேதி இயலில் பயன்படுவது. (வேதி)

samara - சிறகுக்கனி: ஒருவிதையுள்ள பிளவுறாக் கனி. கனியுறை சிறகாக மாறியுள்ளது. தண‌க்கு, வேம்பாடம் (உயி)