பக்கம்:அறிவியல் அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cis

86

cle


cis - வடிவமைப்பு: வடிவியல் அமைப்பு. இதில் ஒத்த தொகுதிகள். ஒன்று மற்றொன்றுக்கருகில் இருக்கும். (இய)

cisterna - பை, இடைவெளி உயிரணுவின் கோல்கை உறுப்பின் பை. அல்லது அகக்கணிய வலைப்பின்னலின் பை. (உயி)

citrate - சிட்ரேட்: நாரத்தைக் காடி உப்பு (வேதி)

citric acid - நாரத்தைக் காடி: C6H14O.வார்ப்புரு:S C6H8O7 வெண்ணிறப் படிகக் காடி. நாரத்தைகளின் பண்புகளுக்குக் காரணம், இதன் உப்பு சிட்ரேட் (வேதி)

citrol - சிட்ரால் C10H14O. வார்ப்புரு:S C10H16O. வெளிறிய மஞ்சள் நிற நீர்மம். நாரத்தை மணம். எலுமிச்சையிலிருந்து பெறப்படுவது. நறு மண மூட்டும் பொருள். (வேதி)

cladode - இலைத்தொழில் தண்டு: தண்டின் கணுவிடை உருமாற்றம் பெறுவது. இலையாக வேலை செய்தல். அகன்றிருக்கும். ஒளிச்சேர்க்கை நடத்த வல்லது. எ-டு. சப்பாத்தி. பா. phylloclade (உயி)

claspers - பற்றிகள்: 1. சில ஆண் பூச்சிகள் வயிற்றின் பின் முனையில் காணப்படும் ஓரிணை இணையுறுப்புகள். கலவியின் பொழுது பெண் பூச்சியைப் பற்றப் பயன்படுவது. 2. குருத்தெலும்பு மீனான நாய்மீனில் இது புணர்ச்சியுறுப்பு. (உயி)

class - வகுப்பு: வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. ஒத்த பல வரிசைகளைக் கொண்டது. (உயி)

classification - வகைப்பாடு: உறுப்பு முதலிய பண்புகளைக் கொண்டு உயிரிகளைப் பல தொகுதிகளாகவும் அதற்குட்பட்ட பிரிவுகளாகவும் பகுப்பதற்கு வகைப்பாடு என்று பெயர். (உயி)

claudetite - கிளாடைட்: AS4O4. வார்ப்புரு:S AS2O3. அர்சினிக ஆக்சைடின் கனிம வடிவம். (வேதி)

clavicle - காறை எலும்பு: கழுத்துப் பட்டை எலும்பு, தோள்பட்டையையும் மார்பெலும்பையும் இணைப்பது.

clay - களிமண்: பிளாஸ்டிக் தன்மை, ஈர நிலையில் ஊடுருவாமை, உலர்ந்தால் வெடித்தல் ஆகியவை பண்புகள். களிக்கனிமங்களாலானது.

clay minerals - களிமண் கனிமங்கள்: மிகச்சிறிய துகள்கள். அலுமினிய நீர்ச் சிலிகேட்டுகளாலானது. அடுக்கு அமைப்பும் படிகத் தன்மையும் கொண்டவை. முக்கிய தொகுதிகள். 1. கேயோலினைட் 2. கேலாய்சைட் 3. இலைட் 4. மாண்ட்மாரிலோனைட் 5. வெர்மாகுலைட். (வேதி)

cleaners -1. தூசித் துடைப்பிகள்: பொருள்களிலிருந்து தூசி நீக்கும் எந்திரம். 2. தூசி துடைப்பவர்.

cleaners, dry - உலர் சலவையாளர்கள்: உலர் முறையில் துணிகளைச் சலவை செய்பவர்-