பக்கம்:அறுந்த தந்தி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் l3i

"ஆயிர வருஷங்களுக்கு மேலும் வாழவேண்டுமா?’ என்று நீலமேனி நெடியோன் வினவிஞன். -

"அதைப்பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது எனக்கு வாழ்க்கையில் இன்பம் தருவதற்கு ஒரு மனேவி வேண்டும்’ என்று வேண்டினன். *

பகவான் புன்னகை பூத்தான். இதற்கெல்லாம் நாம் சம்மதிக்கவில்லையே! உன் யோக கேமத்தை விசா ரிக்கத்தான் வந்தோமே தவிர உனக்குக் கல்யாணம் செய்து வைக்க வரவில்லை' என்ருர்.

'அந்த மாதிரி திருவுள்ளம் பற்றக் கூடாது. என் ஆயுள் விஷயமாகத்தான் தேவரீர் நிபந்தனையிட்டீர்களே யொழிய, இந்த விஷயங்களில் ஏழையாகிய எனக்கு அருள் புரியத்தான் வேண்டும்' என்று கெஞ்சினன்.

'சரி ; அப்படியே ஆகட்டும். உனக்கு இதுகாறும் கிடைக்காத அருமையான மனேவி கிடைப்பாள்’ என்று அருள் செய்து மறைந்தான் மாயவன்.

அாறு ஆண்டுகள் கிரம்பிய அவன் மீண்டும் புத்துயிர் பெற்ருன். யாரோ ஒருவர் அவனைத் தேடிக்கொண்டு வன்து தம் பெண்ணே மணம் செய்து வைத்தார். அழகினு லும் குணத்தினுலும் அவளுக்கு அவளே கிகாாக இருந் தாள். அன்பைப் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? அவளுடைய அன்புப் பிணைப்பிலே சிரஞ்சீவி மனிதன் கண்டறியாத இன்பத்தைக் கண்டான். தேவர்களெல்லாம் கண்டு பொருமைப்படும் வாழ்வை நடத்தினன்.

யமன் தன்னுடைய பரிவார தேவிதைகளை அனுப் பினன். அவள் உடல் தளர்த்தாள். அவனுக்கோ இளமை முறுக்குத் தளரவில்லை. "ஐயோ! இதென்ன, நீ என்னே விட வயசு முதிர்த்து வருகிருயே!' என்று திடுக்கிட்டான் அவன். பழைய ஞாபகங்களெல்லாம் வந்தன. "ஐயோ! கடவுளே, இவளுக்கும் என்னுடைய சிரஞ்சீவித் தன்மையை அளிக்கக்கூடாதா? இவளுக்குக் கனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/138&oldid=535377" இலிருந்து மீள்விக்கப்பட்டது