பக்கம்:அறுந்த தந்தி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் 135

டும் நடக்காத காரியம்' என்று அருள் செய்துவிட்டு மறைந்தான் திருமால்.

கடவுளின் வாக்குப் பலித்தது. இருநூறு வயசு கிரம் பிய அவனே உலகத்தார் கொண்டாட ஆரம்பித்தனர். உலக அதிசயப் பொருள்களுள் ஒருவகை அவன் ஆன்ை. பெரிய கோயில் ஒன்று கட்டி அவனே அதில் வைத்துப் பூஜை செய்யலானர்கள். ராஜாதிாாஜர்களெல்லாம் அவன் முன் வந்து கீழ் விழுந்து வணங்கித் தோத்திரம் செய்து

சனருாகள.

உலகம் முழுவதும் சேர்ந்து அவனுக்கு உபசாரம் செய்தது; பாராட்டியது; ஸ்கஸ்ரநாம அர்ச்சனே செய் தது. ஆனல் அவனுக்குச் சுகம் இருந்ததா?

'ஐயோ! என்னேத் தனியாக அணுகி என் உள்ளத் தோடு ஒட்டிப் பேசுவார் ஒருவரைக் காணேனே! கூட்டங் கூட்டமாக வந்து என்னைக் கும்பிடுகிருர்களே ! நான் என்ன சிலா விக்கிரகமா? விளையாட்டாகப் பேசிக்கொண் டிருக்கலாமென்ருல் அதற்கு ஒருவரும் கிடைக்கவில்லையே! உலகம் முழுவதும் ஒரு ஜாதி, தான் ஒரு ஜாதி என்று பிரிக்கப்பட்டுப் போனேனே! எனக்கு இந்தச் சிறையை கிருமாணித்துக் கோயிலென்று சொல்லிப் போற்றுகிருர் களே! இவ்வளவும் என்ளேப் பரிகசிப்பவைபோல அல் லவா இருக்கின்றன? காலாறத் தனியே நடக்க விடமாட் டேன் என்கிருர்கள். ஒரு நான் பட்டினி கிடக்க எனக்கு உரிமை இல்லை. சேர்ந்தாற்போல இரண்டு நாள் குறட்ட்ை விட்டுத் துணங்கலாமென்ருல், உலகமே என் துரக்கத்தைக் கலைப்பதற்கு ஆயத்திமாக அல்லவோ இருக்கிறது ? கிமிஷத் துக்கு நிமிஷம் மணியோசையும், முரசொலியும், சங்கநாத மும், மேளத்தின் முழக்கமும் இந்தச் சிறையிலே இடி யைப்போல இடித்து என்னைத் திடுக்கிட வைக்கின்ற னவே! ஐயோ! மனிதர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்கு மரணம் என்னும் திவ்ய அமிர்தம் கிடைத்திருக்கிறது. எனக்கும் அதுதான் மருத்து. இனி நான் தவம் புரிவேன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/142&oldid=535381" இலிருந்து மீள்விக்கப்பட்டது