பக்கம்:அறுந்த தந்தி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 175

போட்டி, நீ மிகவும் சாதுர்யம் படைத்த பேர்வழி; சரி, இனிமேல் கதையை முடித்துவிடு.”

மேலே பாட்டி கதையைத் தொடர்ந்து வர்ணனைகளு. டன் சொல்லத் தொடங்கினுள். .

ரோஜகுமாான் ராஜகுமாரியின் அணப்பில் இன்பங் கண்டு பிறகு பேச ஆரம்பித்தான்; புத்திசாலித்தனமாகவே பேசினன். அவளைத் தன் ஊருக்கு அழைத்துப் போய்க் கல்யாணம் செய்துகொண்டான்.” ந்தக் கதையை அவள் விடியுமட்டும் வருணனேயோடு விரித்துச் சொல்லி நிறைவேற்றி, "அப்பா, கதை முடிந்தது; கத்திரிக்காய். காய்த்தது’ என்று சொல்லி முடித்தாள்.

யமதர்மராஜனுக்கே இப்போது ஒரு சந்தேகம் வந்து விட்டது. "பாட்டி, பாட்டி! அதென்ன் கதை முடிந்தது. கத்திரிக்காய் காய்த்தது என்ருயே; கத்திரிக்காய் எங்கி ருந்து வந்தது?’ என்று கேட்டான்.

'அதுவா? உனக்குக் கதை சொல்லிப் போது போக்கி னதற்கு அதுதானப்பா காரணம். என் போன் வைத்த, கத்திரிச்செடி பூப்பூத்துக் காய் காய்க்கும் தருணம், நீ" வந்துவிட்டாய். அந்தக் காயைக் கறி பண் ணிச் சாப்பிட வேணுமென்று எனக்கு மிகுந்த சபலம். நீ முதல் நாள் வந்தாயே, அன்று அது இளம் பிஞ்சாக இருக்தது ; இன்று காய்த்துவிட்டது. அதைக் கறி பண்ணித் தின்னு மட்டும் நீ கருனே செய்து காத்திருந்தால் நல்லது; இல்லை யென்ருலும் குற்றம் இல்லை. என் கதை முடிந்தது, கத்தி ரிக்காயும் காய்த்தது என்று சந்தோஷப்படுகிறேனே, இதுவே போதும்' என்ருள்.

யமதர்மராஜனுக்கு நாளுக்கு நாள் பாட்டியினிடம் மதிப்பும் வியப்பும் பெருகியிருந்தன. இன்ருே எல்லே. யில்லாத இாக்கம் ஏற்பட்டது. இதுவர் சமாசாம்? அப் படியாளுல், பாட்டி, நீ அந்தக் கத்திரிக்காயைக் கறி பண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/182&oldid=535421" இலிருந்து மீள்விக்கப்பட்டது