பக்கம்:அறுந்த தந்தி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - அறுந்த தந்தி

சூன்யமாக இருந்தது போலவே, அவள் உள்ளமும் சூன்ய மாக இருந்தது. அது மரத்துப் போய்விட்டது. சென் றதை கினேத்துத் துக்கப்படவோ, வருவதை நினைத்துச் சந்தோஷப்படவோ அதற்குச் சக்தி இல்லை. ஜீவன் முக்த நிலை என்பது இதுதானே?

பொத்தென்று ஏதோ சப்தம் கேட்டது. கினேப் பும் மறப்பும் அற்ற அவஸ்தையிலிருந்து இறங்கி வந்தாள். அவளுக்கு முன் ல்ை அணுக் காசு ஒன்று விழுந்து கிடங் தது. கையில் எடுத்துக்கொண்டே முன்னே பார்த்தாள். "அதை எடுத்துக்கொள்” என்ற இளங் குரலேக் கேட் டாள். யாரோ பையன், பத்து வயசுக்குள் இருக்கும். இந்தத் தர்மத்தைச் செய்திருக்கிருன். அவள் ஏதோ சொல்ல வாயெடுப்பற்குள் அவன் உள்ளே போய் விட்டான். முழுசாக ஒாணுவைப் போட்ட அந்தப் பையன்தான் அவளுக்குத் தெய்வமாகப் பட்டான். உள்ளே இருக்கும் தெய்வத்தைப்பற்றி அவளுக்கு அக் கறை இல்லை. முகத்தில் சிறிது மலர்ச்சி உண்டாயிற்று.

2 இன்று ரவலிக ரஞ்சனி சபையில் ஏதோ உதவிக் கச் சேரியாம். மயிலாப்பூர் பங்களாக்களில் ஒரு பெண்மணி பாக்கியில்லை; மாம்புலம், துங்கம்பாக்கம், திருவல்லிக் கேணி, பட்டணம் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கூட்டம் வந்திருக்கிறது. பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று கொடுத்து டிக்கட் வாங்கியிருக்கிருர்கள் கனவான்கள். பிரசித்தமான ஒருவர் கட்டப்போகிற அநாதை விடுதிக் காக அந்தக் கச்சேரி நடைபெறுகிறது. சினிமா நட்சத் திரம் ஒன்று அன்று புது ராகத்தைப் பொழியப் போகி றது. கேட்க வேண்டுமா உற்சாகத்துக்கு? ஆறு பெருக் கெடுத்துப் போவது போலக் கூட்டம் போய்க்கொண்டே இருக்கிறது. சங்கீதத்தைக் கேட்கவும் அதன் மூலமாகத் தர்ம கைங்கரியத்துக்கு உதவி செய்யவும் போய்க்கொன் டிருக்கிறது. ககாத்து ஜவுளிக் கடையில் எத்தனே வித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/59&oldid=535300" இலிருந்து மீள்விக்கப்பட்டது