பக்கம்:அழகர் கோயில்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் பள்ளர் பறையரும் 101 திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலேயே பள்ளர்கள் நிறையக் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். இருவருமே, பள்ளர்கள் அடிமைகளைப் போல வாழ்வதாகவே குறிப்பிட்டுள்ளனர். 'பள்ளர்கள் பொதுவாகச் சைவர்கள்; ஆயினும் நடைமுறையில் பேய்வழிபாட்டினர். கள்ளும் கறியும் வேண்டும் கிராம தேவதை களையே பூசிக்கின் றனர்" எய்கிறார் நர்ஸ்டன், பள்ளம் பழங் காலத்தில் வேளாளர் போலச் சிவ வழிபாடு உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். பின்னர் சாதியில் தாழ்ந்து, சமூகத்தில் கீழ்நிலை அடைந்தபின் இவர்களுக்குக் கோயில் நுழைவும் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டு, இதனால் இவர்கள் கிராமதேவதை வழிபாட்டுக்குத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டனர் என்று தங்கராஜ் கூறுகிறார்.6 சைவர்களாயிருந்ததற்கு இருவருமே சான்றேதும் காட்டவில்லை. பள்ளர்கள் சிவ வழிபாட்டு நெறிக்கும் சிறுதெய்வ வழிபாட்டு நெறிக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. இரு வழிபாடுகளிலும் நெற்றிக் குறியாகத் திருநீறே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சைவநெறிக்கு அடிப்படையிலேயே முரண்படும் வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் குருதிப்பலியும், புலால் உணவும் இடம்பெறுகின்றன. அதே நேரந்தில் எச்சாதியினரும் வைணவராக நெற்றியில் திருமண் இடும்போது (புலால் உண்ணும் சாதியினர்கூடத் திருமண் இடுகின்ற காலங்களில் மட்டும்) புலால் உண்ணுவதில்லை. எனவே திருமண் அணித்தவர் வைணவர் என அறியப்படுவதுபோல, திருநீறு அணிந்தவர் சைவர் எனக் கூற இயலாது. எனவே நடைமுறையில் சிவ வழிபாட்டினராக இல்லாவிட்டாலும் நிருந்து அணியும் காரணத்தால் பள்ளர்களைச் சைவர்கள் எனந் தர்ஸ்டன் நினைக்கிறார் என்றே தோன்றுகிறது. 5.3.3. பறையரும் வைணவமும் : தமிழிலக்கியம் பழைய குடியினராகக் குறிக்கும் சாதியாரில் 'பறையர்' இடம்பெறுகின்றனர். 'பறையர் வயல்வேலை செய்பவர் கள்' என்று ஹட்டன் (Hutton) குறிப்பிடுகிறார்." ஒரு கிராமத்தில் பெரும்பாலும் வைணவப் பெயர்களுடன் வைணவர்களாகப் பறையர் வாழ்வதைக் கிளேட்டன் (Clayton) கண்டதாகக் குறிப்பிடும் தர்ஸ்டன், "தாதர் எனப்படும் பறையர்கள் வைணவர்களாவர் என்றும் கூறுகிறார்.8 7ஏ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/108&oldid=1467973" இலிருந்து மீள்விக்கப்பட்டது