பக்கம்:அழகர் கோயில்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

242 அழகர்கோயில் மணர்கள் இதை எந்த வகையில் ஏற்றுக்கொண்டனர் என்பது தெரிகிறது. திருமால் கோயில்களில் இறைவன் உண்டும், உடுத்தும், அணிந்தும் எஞ்சியவற்றைச் சேஷப் பிரசாதம்' எனக் கூறுவது மரபாகும். செங்குட்டுவன் வடதிசை நோக்கிப் போருக்குப் புறப் பட்டபோது, "ஆடக மாடந்து அறிதுயில் அமர்ந்தோள் சேடங் கொண்டு சிலர்நின் றேத்த அவன் அதைப் பெற்றுக்கொண்டான் என்பர் இளங்கோவடிகள். இவ்வாறு 'சேடம்' பெறுவதைத் திருமாலடியார் பெரும்பேறெனக் கருதுவர்.

  • உடுத்துக்களைந்ததின் பீதகவாடை உடுத்துக் கலந்த துண்டு

தொடுத்த நுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களேம்’62 எனப் பெரியாழ்வார். அடியார்கள் 'சேடம்' பெறுவதைக் குறிப்பர். எனவே நாள்தோறும் அர்த்தசாமப் பூசையில் திருமால் உண்டு எஞ்சியதனையும்,அணிந்து களைந்த மாலையினையும் கருப்ப சாமிக்குப் படைப்பதன்மூலம் கருப்பசாமியினைத் திருமாலின் அடிய வராக்க உயர்சாதியினரான பிராமணர் முயன்றிருக்கின்றனர். எனவேதான் இப்பணியினை அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றனர் எனச் கருதலாம். பிராமணரல்லாதார் தெய்வமாக இரத்தப்பலி பெறும் இத்தெய்வத்தினை 'கிருஷ்ணபுத்ரன்' என வடமொழிச் சுலோகம் குறிப்பதும் இதன் காரணமாகவே என்று கருதமுடிகிறது. "பிராமணர்களுக்கும், சாமியாடிகளுக்கும் எப்பொழுதும் பகைமை இருந்துவந்திருக்கிறது" என்பர் பியூகஸ் (Mother Fuchas}54 இக்கோயிலில், சாமியாடிகளின் சிறு தெய்வமான கருப்பசாமிக்கும் பிராமணர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவு வியப்பைத் தருவ தாகும். இவ்வுறவினைப் பற்றிய சி. இராசகோபாலச்சாரியாரின் (ராஜாஜி) கருத்து இங்கு நோக்கத்தக்கதாகும். "அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பன் பற்றிய மரபுகள் ஒத்துப்போதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/249&oldid=1468123" இலிருந்து மீள்விக்கப்பட்டது