பக்கம்:அழகர் கோயில்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை IV : 2 சித்திரைத் திருவிழாவிற்கு மாட்டுவண்டி கட்டிவந்த அடியவர்களின் ஊர்கள் -ஒரு மாதிரி ஆய்வு 1979ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் மே மாதம் 9 ஆம் தேதி இரவு 1 மணியனளில் அழகர் ஊர்வலம் அழகர் கோயிலி லிருந்து மதுரைக்குப் புறப்பட்டது. அன்று மாலை 5.45 லிருந்து மறுநாள் மாலை 5.45 வரை தொடர்ச்சியாக அழகர்கோயில் வெளிக் கோட்டை வாசலில் அமர்ந்து, வெளிக்கோட்டைக்குள் இருந்து வெளியே செல்லும் மாட்டு வண்டிகள் மட்டும் கணக்கிடப்பட்டன. ஒவ்வொரு வண்டியும் எந்த ஊரைச் சேர்ந்தது என வண்டியோட்டி வருபவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளப்பட்டது. இந்தக் கால எல்லைக்குள் கோட்டைக்குள் வந்த வண்டிகளும், இதன் பின்னர் வெளியே சென்ற வண்டிகளும் கணக்கிடப்படவில்லை. கோட்டையிலிருந்து வெளியே செல்லும் வண்டிகள் கோட் டைக்குள் நுழையக் கட்டணம் செலுத்திப் பெற்றிருந்த சீட்டைக் கோயிற் பணியாரிடம் காட்டிய பின்னரே வெளியே செல்ல முடியும். எனவே இந்த இடம் தேர்வு செய்யப்பெற்றது வெளிக் கோட்டைக்கு வெளியே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட வண்டிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை: சிவகங்கை தாலுகா 21. 8. % மதுரை தாலுகா 8.5.% முதுகுளத்தூர் தாலுகா 18. 8 % சாத்தூர் தாலுகா 6.2.% அருப்புக்கோட்டை தாலுகா 16 3. % நிலக்கோட்டை தாலுகா 5.1% ஏனைய தாலுகாக்களிலிருந்து வந்த வண்டிகள் 5% க்கும் குறைவானவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/399&oldid=1468283" இலிருந்து மீள்விக்கப்பட்டது