பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 - ஆனந்த முதல் ஆனந்த வரை கொண்டு போவார்கள். இப்படிப்பட்ட இயற்கைச் சூழல் நிலையில் அமைந்த அக்கோயில் என் உள்ள்த்தில் இடம் பெற்றதில் வியப்பில்லை அல்லவா! கோயிலில் இலிங்கம் மட்டும்தான் இருந்தது என்றேன். அவ்விலிங்கத்துக்கு வாணிஸ்வரர் என்று பெயர். அக்கோயி லுக்கும் வாணிஸ்வரர் கோயில் என்றே பெயர். நானும் என் நண்பரும் மாலையில் அங்கே சென்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கல் மீது உட்காருவோம். ஒரு நாள் ஒரு பழம் கற்சிவையின் மீதே உட்கார்ந்து விட்டோம். எப்படியோ அவ்விக்கிரகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று, சிறுவர்களால் என்ன செய்ய முடியும்? தூரத்தே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிலரைக் கூவி அழைத்தோம். அவர்கள் வந்தார்கள். அனைவருமாகச் சேர்ந்து புரட்டினோம்; நன்றாகப் புரட்டிப் பார்த்தோம். முகமும் பிற பகுதிகளும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. அன்று அதற்குள் இருட்டிவிடவே ஒன்றும் செய்யாது வீடு திரும்பிவிட்டோம். மறுநாள் மாலை அங்கு செல்லும் போது கையில் ஒரு குடத்துன் சென்றோம். பக்கத்திலிருந்த ஒடையில் நீர் முகந்து கொண்டு வந்து மண் மூடியிருந்த அந்தச் சிலையின் மீது ஊற்றினோம். பல நாளாகப் பிடித்து மூடிய அந்த மண் சிறுகச்சிறுக ஊறிக் கொண்டு வந்தது, சிறிது சிறிதாக எல்லா மண்ணையும் கல்லி எடுத்துவிட்டோம். பிறகு நோக்கும் போது அது ஒரு திருமால் உருவாகக் காட்சி அளித்தது. இருபுறமும் சங்கும் சக்கரமும் தோன்ற முகமும் களையோடு பொருந்தியது. உயரம் சுமார் நான்கடி இருக்க லாம். அந்த உருவை நோங்கி நான் இரக்கப்பட்டேன். 'பாவம் எந்தக் காலத்தில் யாரால் செய்யப் பெற்றதோ, எத்துணைபேர் பக்தியோடு போற்றிப் பாடினார்களோ; இன்று இத்தனை ஆண்டுகளாகக் கேட்பாரற்று முகத்தை