பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 - ஆனந்த முதல் ஆனந்த வரை போற்றவும் நன்றி காட்டவும் நினைத்து, ஒன்று முதல்.ஐந்து. வகுப்புவரை பிரித்து, அதைச் சுந்தரவதனம் ஆரம்பப்பள்ளி' எனப் பெயரிட்டோம். அதற்கெனத் தனிக் கட்டடமும் கட்டி, அது தனியாகச் சுமார் ஐநூறு மாணவர்களுடன் (மாநகராட்சி தந்த இடத்திலேயே ஒரு பக்கத்தில்) நன்கு நடைபெற்று வருகின்றது. திரு வி. க. பள்ளியும் முறையாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தனிப்பட்ட முறையில் செயல்பட்டு இரு பள்ளி களைத் தொடங்கியதோடன்றி, திரு. புருடோத்தம முதலியார் அவர்களுடன் செங்கற்பட்டு மாவட்டத்தில் பலப். பல பள்ளிகளை-உயர்நிலைப் பள்ளிகளைத் தொடங்க உடனிருந்து உதவினேன். பெருநகர் போன்ற ஊர்கள் சிலவற்றிற்கு நானும் அவருடன் சென்று பள்ளி அமைப்புக்கு ஆவணசெய்து, உரிய முறையில் பள்ளிகளைத் தொடங்கி வைத்தோம். எல்லாப் பள்ளிகளும் செம்மையாக நடைபெறு கின்றன. இடையில் செங்கற்பட்டு மாவட்டக் குழுவின் (District Board) உட்குழுவாக அமைந்த கல்விக் குழுவில் (Education Committee) உறுப்பினனாக மூன்றாண்டுகள் பணியாற்றி னேன். மாவட்டங்களில் உள்ள ஆரம்பப்பள்ளி, மேநிலைப் பள்ளிகளைப் பார்வையிட்டும் தேவையான வகையில் ஆக்கப் பணிக்கு அடிகோலியும் வழிகாட்டியும் உறுப்பினர்கள் செயல் பட்ட்ோம். அப்போது திரு. செய்யூர் V. K. இராமசாமி முதலியார் அவர்கள் மாவட்டக் குழுவின் தலைவராகவும் ஆத்தூர் சீனிவாச ஐயர் எங்கள் உட்குழுவின் தலைவராகவும் இருந்தனர். கல்வித்துறையில் பணிபுரிந்த நான் ஒருவனே அவ்வுட்குழுவில் உறுப்பினனாக இருந்தமையின் என் கருத்துக் களை அவர்கள் ஏற்றுப் பல நல்ல மாற்றங்களையும் செய். தனர். பள்ளிப் பணிகள் இன்னும் பல; விரிப்பில் பெருகும் என இத்துடன் அமைகின்றேன். -