பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. உவமை நயம் உவமைகள் கவிதையின் அழகை அதிகப்படுத்து கின்றன; கவிதைக்கு வலிமை சேர்க்கின்றன. சொல்ல. விரும்பும் கருத்தைத் தெளிவுபடுத்த உவமைகள் உதவு கின்றன. அத்துடன் க வி ஞ ணி ன் கற்பனை வீச்சையும், அனுபவப் பரப்பையும், சிந்தனைத் திறத்தையும் அவை: புலப்படுத்துகின்றன. வாழ்க்கையையும் மனிதர்களையும் இயற்கைச் சூழலையும் கவிதை படைப்போன் எவ்வளவு ஆழ்ந்து கவனித்திருக்கிறான் என்பதை அவன் கையாளும் உவமைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு உண்மையை சுட்டிக் காட்ட விரும்புகிற படைப்பாளி படிப்போரின் மனதில் அதை அழுத்தமாகப் பதியச் செய்வதற்காக பொருத்தமான உவமைகளை எடுத்தாள்கிறான். சில சமயம், பொருந்தாத விஷயங்கள் போல் தோன்றுகிற வற்றைக்கூட , தான் சொல்ல வந்த விசயத்தோடு பொருத்திக் காட்டி வெற்றி பெறுகிறான். அப்போது படைப்பாளியின் திறமை அதிகம் ஒளி வீசுகிறது என்றுே சொல்ல வேண்டும். கவிதைப் படைப்புகளை அழகு படுத்தவும் மெரு. கூட்டவும் உவமைகளைப் பயன்படுத்துகிறார்கள் கவிஞர் கள். பெருங்கவிக்கோவும் ரசித்துப் பாராட்டும்படியாக உவமைகளைத் தமது படைப்புகளில் ஆங்காங்கே பதித்து வைத்திருக்கிறார்.