பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் மடந்தை 117 டார்கள். தான் உணர்ந்ததைப் பிறரும் உணரும்படி செய்யவேண்டும். அதாவது கலைஞன் கலேப் பொருளைப் படிைத்துப் பிறருக்கு இன்ப்த்தை ஊட்டவேண்டும். ஓரிடத்தில் உள்ள பொருள் மணந்தால் அந்த மணம் பிற ரிடம் சென்று அவர்களுக்கு இன்பம் தருகிறது. அழகிய பொருள் ஒரிடத்தில் இருந்தால் அதன் அழகு கண்ணேப் பறிக்கிறது. மணமும் அழகும் உள்ள பொருளைக் கலைஞ லுடைய படைப்புச் சக்திக்கு உவமையாக்கலாம். எல்லாவற்றையும் ஒருங்கே சேர்த்துப் பார்க்கலாம். வெண்மை, மென்மை, தண்மை, மணம், அழகு எல்லாம் பொருந்திய ஒரு பொருள் இருந்தால் அதனை நடுநிலை, நுட்பம், பரிவு, பிறர் உள்ளத்தைக் கவரும் படைப்பைப் படைக்கும் இயல்பு ஆகியவற்றைக் கொண்ட கலைஞன். உள்ளத்துக்கு உவமையாகக் கூறலாம். இத்தனே இயல்புகளையும் உடையது மலர்; வெள்ளைப் பூ, மல்லிகை.கந்தியா வட்டை முதலிய பூக்களில் மேலே சொன்ன ஐந்தும் இருக்கின்றன. உவமை சொல்லும் போது இருக்கிறவற்றில் உயர்ந்ததைச் சொல்வது வழக்கம். வெண்ணிறம் பெற்ற மலர்களுக்குள் சிறந்தது எது? வெண்டாமரைதான். அதைக் கலைஞனுடைய உள்ளத் துக்கு உவமையாகச் சொல்வது மிக மிகப் பொருத்தம். வெண்டாமர்ை போன்ற உள்ளத்தில் கல இடம் பெறும். வெண்டாமரை என்ற உவமையைச் சொன்னல் ஐந்து வகையான இயல்புகளும் சேர்ந்த நிலயையே நினைக்கவேண்டும். - . . . . . . . . . . . . . . । கலக்கெல்லாம் கட்வுளாகக் கலைமகளை நாம் வண்ங்கு கிருேம். கலைமகள் வெண்ட்ாமரையில் வீற்றிருக்கிருள். கலைஞன் உள்ளத்தில் எழுந்தருளியிருப்பது கில கலேயையே கலைமகளாக நினைக்கிருேம் க்லைஞன் உள்ளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/119&oldid=744365" இலிருந்து மீள்விக்கப்பட்டது