பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

162 ஆழ்வார்கள் காலநிலை இதனால் 736-க்குச் சிறிது முன்பாகத்தான், ஆழ்வாராற் பரமேச்சுரவிண்ணகரப்பதிகத்திற் கூறப் பட்டனவும் உதயசந்திரன் உதவியனவுமான வெற்றி களை நந்திவன்மன்பெற்றவன் என்று கொள்ளப்படும்: படவே, அவ்விண்ணகரப்பதிகம் 736-க்குப் பின்பே பாடப்பட்டதென்பது பெறப்படுகின்றது. பண்டு, முனநாள் என்று இத்தகைய சொற்களால் அவ்வெற்றித் திறங்களை ஆழ்வார் விசேடித்தலால், குறைந்தது 8 ஆண்டுகள் அப்பெரியார் பாடுதற்கு முன் அப்போர்கள் நடந்தனவென்று கொள்ளின், 744-ல் அப்பதிகம் இயற்றப்பெற்றதாக வேண்டும். இனி, அவ்விண்ணகரப்பதிகத்துக்கு முன்பாட்டில் --- அஃதாவது அட்டபுயகரப்பதிகத் திறுதியில் கூறப் பட்ட வயிரமேகன் என்பான் முற்கூறிப் போந்தபடி இரட்ட வேந்தனான தந்திதுர்க்கனாயினும், அவன் பெயரைத் தன் கௌரவ நாமமாகத்தரித்த நந்திவர்மனா யினும், அவ்விரட்டனால் கச்சி கைப்பற்றப்பட்ட 754-க்குப் பின்பே , அவ்வட்டபுயகரப்பதிகம், பாடப் பட்டதாக வேண்டும். ஆகவே, உத்தேசம் 744-க்கும் 754-க்கும் உட்பட்ட நந்திவன்மனது ஆட்சியிடைக் காலத்தில் திருமங்கை மன்னன் விளங்கியிருந்தவர் என்பது பெறப்படத் தடையில்லை. பார் மன்னு பல்லவர்கோன்' 'வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி' என்ற ஆழ்வார் திருவாக்குக்கள் இக்கொள்கையை உறுதிப்படுத்தல் மேலே விளக்கப்பட்டது. நந்திவன் மனது அவ்விடைக்காலம் திருமங்கையாரது வாழ் நாளின் பிற்பகுதியாகக் கொள்ளற்குரியது. முற்பகுதிக்